சிக்ஸர் அடித்த சூர்யா.. ரெட்ரோ ரூ.100 கோடி வசூலா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: பல வெற்றிப்படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் பூஹா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், விது, நாசர், பிரகாஷ் ராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜு இணைந்து தயாரித்துள்ளனர்.

சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்த படத்தில் சூர்யா சந்துரு என்கிற ரோலில் நடித்திருந்தார்.அந்தப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கங்குவா படம் வெளியானது. இந்த படத்திற்காக சூர்யா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் மொத்த கவனத்தையும் இந்த படத்தின் மீதே வைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், முதல் நாளிலேயே மோசமான விமர்சனங்களால் தோல்வித் திரைப்படமாக மாறியது.

suriya retro

ரெட்ரோ: கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் கமிட்டானார். படம் வெளியாவதற்கு முன்பே படத்தில் இருந்து வெளியான பாடல் இணையத்தில் வெளியாகி பாராட்டை பெற்றது. இதில், பாரிவேல் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இதில், பூஜா ஹெக்டேவும் சூர்யாவும் காதலிக்கின்றனர். அப்போது, பூஜாஹெக்டே, சூர்யாவிடம் ரவுடித்தனத்தை விட்டுவிட்டுவா திருமணம் செய்து கொள்ளாமல் என்று சொல்ல, சூர்யாவும் தனது காதலுக்காக ரௌடிசத்தை விட்டுவிடுகிறான். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, தூத்துக்குடி துறைமுகத்தில் கடத்தப்பட்ட ஒரு தங்க மீன் காணாமல் போகிறது. அதை சூர்யா தான் எடுத்தார் என்று சந்தேகப்படும் சூர்யாவின் வளர்ப்பு அப்பா ஜோஜு ஜார்ஜ், திருமண விழாவுக்கு வந்து பிரச்சனை செய்கிறார். அந்த சண்டை கைகலப்பாகி கடைசியில், ஜோஜு ஜார்ஜின் கை வெட்டப்பட, சூர்யா சிறைக்குச் செல்கிறார். அதன் பின் சூர்யா வெளியே வந்தாரா... இல்லையா.. என்பது தான் ரெட்ரோ படத்தின் கதை.

மொத்த வசூல்: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1ந் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும், தெலுங்கு நடிகர் ஞானியின் ஹிட் 3 படமும், சூர்யா நடித்த ரெட்ரோ படமும் வெளியானது. இதில், ரெட்ரோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் படம் ஐந்து நாட்களில் 104 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரெட்ரோ படம் பிளாப், சொதப்பல் என்று இணையத்தில் பலர் கமெண்டுகளை போட்டால், அது படத்தின் வசூலை பாதிக்காமல் ஐந்து நாட்களில் ரூ 100 கோடியை கடந்துள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் இதுதான்டா கம்பேக் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X