40 வயது சூர்யாவுக்கும் 20 வயது மமிதா பைஜுவுக்கும் காதல்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர் எப்படி இருக்கு?
சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் டீசர் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா மற்றும் ஒரு குழந்தை இருந்த நிலையில், சூர்யாவோட தம்பி தான் அந்த குழந்தை என கதைகள் உலா வந்தன. ஆனால், டீசரில் படத்தின் கதையை தெளிவாக இயக்குநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கிரே டைவர்ஸ் அதிகரித்து வரக் காரணமே ஆண்களுக்கு வயதான காலத்தில் ஏற்படும் 2வது லவ் தான் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வயது வித்தியாசம் பார்க்காமல் சமீப காலமாக திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், 20 வயது வித்தியாசத்தில் ஏற்படும் காதல் கதையை சூர்யாவை வைத்து இயக்குநர் வெங்கி அட்லூரி சொல்லப் போகிறார்.

வரும் ஜூலை மாதம் படம் வெளியாகும் என்கிற அப்டேட்டுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர் வெளியாகி உள்ளது. மமிதா பைஜுவை டியூட் படத்தில் திட்டியது போல ரசிகர்கள் இந்த படத்தில் திட்டாமல் இருந்தால் சரி என்றே தோன்றுகிறது.
வயதான சூர்யா: கருப்பு படத்தில் கருப்பு டை எல்லாம் அடித்துக் கொண்டு இளமையான தோற்றத்தில் சூர்யா நடித்த நிலையில், வெங்கி அட்லூரி சூர்யாவுக்கு 40 வயதானவர் கதாபாத்திரத்தையே கொடுத்துள்ளார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா வயது வித்தியாச வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை அப்செட் ஆக்கிய நிலையில், அதே விஷயத்தை கதையாக உருவாக்கி 40 பிளஸ் வயதுடைய பெரிய தொழிலதிபர் 20 வயது இளம் பெண்ணை காதலித்தால் என்ன பஞ்சாயத்து ஏற்படும். அவர்களுடைய ரிலேசன்ஷிப் எப்படி இருக்கும் போன்ற திரைக்கதையுடன் வெங்கி அட்லூரி சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.
மமிதா தான் சேட்டை: 40 வயது ஆளான என்னை 20 வயது பெண்ணான நீ ஏன் காதலிக்க வேண்டும் என சூர்யா வெளிப்படையாகவே டீசரில் கேட்கும் இடமெல்லாம் பக்காவாக உள்ளது. மேலும், யாருடா இந்த பொண்ணு எங்க இருந்து புடிச்சிட்டு வந்த என ராதிகா கேட்கும் காட்சியெல்லாம் கண்டிப்பாக தியேட்டரில் பிளாஸ்ட் ஆகப் போகிறது. கடைசியாக தனது தலை முடியில் மாட்டிக் கொண்டிருக்கும் சிப்ஸை எடுத்து மமிதா சாப்பிடும் காட்சியெல்லாம் அவரது சேட்டைத்தனத்தை இந்த படத்தில் தாராளமாக பார்க்கலாம் என்பதற்கு சாம்பிளாகவே உள்ளது.
அடுத்தடுத்து ட்ரீட்: சீக்கிரமே கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் கருப்பு திரைப்படம், ஜூலை மாதம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் அடுத்து ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு கலாட்டா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு எந்தவொரு படமும் இல்லை. விஜய் ரசிகர்களுக்கு ஜன நாயகன் மட்டும் தான். ஆனால், அதுவும் எப்போ வெளியாகும் என்பது தெரியவில்லை. சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து 3 தரமான ட்ரீட்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications