மீண்டும் இணையும் கர்ணன் பட கூட்டணி...ஹீரோ யாரு தெரியுமா ?

சென்னை : முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு, மிகப்பெரிய பாராட்டை கர்ணன் படத்திற்காக பெற்றுள்ளார் டைரக்டர் மாரி செல்வராஜ். இந்த படத்தில் தனுஷ், லட்சுமி பிரியா சந்திரமவுலி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலிலும், விமர்சனத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு நாட்களே ஆகும் நிலையில் இப்படம் தியேட்டரில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. கார்த்தியின் சுல்தான் படத்திற்கு பிறகு அதிக வசூலை கர்ணன் படம் தான் பெற்று வருகிறது. இதற்காக மாரி செல்வராஜ் மற்றும் தனுஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மீண்டும் கைகோர்க்கும் கர்ணன் டீம்

மீண்டும் கைகோர்க்கும் கர்ணன் டீம்

இந்நிலையில் கர்ணன் பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர் மாரி செல்வராஜுடன் மற்றொரு படத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ளாராம். 2022 ம் ஆண்டின் மத்தியில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிஸியான மாரிசெல்வராஜ், சூர்யா

பிஸியான மாரிசெல்வராஜ், சூர்யா

மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து, விளையாட்டை மையமாகக் கொண்ட வாழ்க்கை படம் ஒன்றை எடுக்கும் வேலைகளை துவக்கி விட்டார். இந்த படத்தை டைரக்டர் பா.ரஞ்சித் தான் தயாரிக்க உள்ளார். அதே சமயம் சூர்யாவும் நவரசா படத்தை முடித்த பிறகு, பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

சூர்யா கையில் பல படங்கள்

சூர்யா கையில் பல படங்கள்

ஞானவேல் இயக்கும், பெயரிடப்படாத இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய படங்களிலும் தற்போது சூர்யா நடித்து வருகிறார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் சூர்யா - மாரி செல்வராஜ் இணையும் படம் பற்றிய தகவல் வெளியானதால் சூர்யா ரசிகர்களும், மாரி செல்வராஜின் ரசிகர்களும் அதை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இருவரும் தற்போது கமிட் ஆகி இரக்கும் படங்களை முடித்த பிறகே இந்த புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X