சிறந்த நடிகர் சூர்யா.. சிறந்த நடிகை சமந்தா.. மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் அசத்தல்!

சென்னை: மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் வெற்றிப் பெற்ற நடிகர்களின் பெயர் பட்டியல் வெளியாகி வருகின்றன.

சூரரைப் போற்று படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சூர்யா சிறந்த இந்திய நடிகராக தேர்வாகி உள்ளார்.

சிறந்த நடிகையாக வித்யா பாலனும் வெப்சீரிஸில் சிறந்த நடிகையாக சமந்தாவும் தேர்வாகி உள்ளனர்.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

மெல்போர்னில் நடைபெற்று வரும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த இந்திய நடிகராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நெடுமாறனாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா.

சர்வதேச அங்கீகாரம்

சர்வதேச அங்கீகாரம்

கோல்டன் குளோப், ஆஸ்கர் என பல சர்வதேச விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொண்ட சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது. மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்திய அளவில் சிறந்த நடிகராக சூர்யா தேர்வாகி உள்ளது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

"Best Actor" என்ற டேகை ட்விட்டரில் டிரெண்ட் செய்து இந்த சந்தோஷமான செய்தியை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிப்பின் நாயகன் சூர்யா என்றும் நீ ஜெயிச்சுட்ட மாறா என்றும் சூர்யா ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களையும் சூரரைப் போற்று படக் காட்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

இந்திய அளவில் ஷெர்னி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் நடிகை வித்யா பாலனை வாழ்த்தி வருகின்றனர்.

சமந்தாவுக்கு விருது

சமந்தாவுக்கு விருது

சினிமாவை தொடர்ந்து வெப் சீரிஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக நடிகை சமந்தாவுக்கு மெல்போர்ன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்துப் போராளியாக நடிகை சமந்தா நடித்திருந்தார்.

ரொம்ப நன்றி

ரொம்ப நன்றி

மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஷேர் செய்துள்ள நடிகை சமந்தா இந்த விருது தனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் என்றும் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே என் மீது வைத்த நம்பிக்கைக்கு மிகப்பெரிய நன்றி என்றும் நடிகை சமந்தா ட்வீட் போட்டுள்ளார்.

சமந்தாவை சுற்றிய சர்ச்சை

சமந்தாவை சுற்றிய சர்ச்சை

தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடிகை சமந்தா நடித்திருந்த நிலையில், ஈழப் பெண்களை இழிவாக சித்தரித்து விட்டார் என நடிகை சமந்தாவை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. ஈழத்துப் பெண்ணாக நடித்தது தனக்கு பெருமையான விஷயம் என்றும் அவர்கள் படும் துயரங்கள் அடங்கிய டாக்குமென்டரியை பார்த்த பின்னரே இதில் நடிக்க தான் சம்மதித்தேன் என்றும் சமந்தா விளக்கம் கொடுத்திருந்தார்.

Recommended Video

Suriya Appreciates Kerala Boys For AYAN Song Recreation | KV Anand
மனோஜ் பாஜ்பாய்

மனோஜ் பாஜ்பாய்

தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ஹீரோவாக நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு சிறந்த வெப்சீரிஸ் நடிகர் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சிறந்த வெப் தொடருக்கான விருது தி ஃபேமிலி மேன் 2வுக்கு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக மிர்சாபூர் 2வுக்கு கிடைத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X