புதுப்பேட்டை படத்தில் முதலில் சூர்யா, சிம்பு நடிக்க இருந்தார்கள்... உண்மையை போட்டுடைத்த ரவி கிருஷ்ணா
சென்னை: காலங்கள் கடந்தும் செல்வராகவனின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது
செல்வராகவனின் திரைவாழ்க்கையில் புதுப்பேட்டை படத்திற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது
இந்த நிலையில் புதுப்பேட்டை படத்தில் சூர்யா, சிம்பு முதலில் நடிக்க இருந்ததாக நடிகர் ரவிகிருஷ்ணா சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.

தோல்வி படங்களாக அமைந்தது
செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தனித்துவமானதாக இருக்கும். குறிப்பாக செல்வராகவன் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படுவதில்லை ஆனால் பல ஆண்டுகள் கழித்து ரசிகர்கள் அந்த படத்தை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அது பல படங்களில் செல்வராகவனுக்கு நடந்தேறி உள்ளது. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். ஆனால் வெளியானபோது அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை. தோல்வி படங்களாக அமைந்தது.

நடிகராகவும் அவதாரம்
செல்வராகவனுக்கு முன்னணி நடிகர்கள் போலவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க இயக்குனராக இருந்து இப்பொழுது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார் அதைத் தொடர்ந்து இயக்குனர் அருண்
மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து வருகிறார். சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் வழிபறி கொள்ளையர்களாக நடித்து வருகின்றனர் இப்படம் முடியும் தருவாயில் உள்ளது.

கொக்கி குமாரு
செல்வராகவன் இதுவரை பல படங்களை இயக்கியிருந்தாலும் அதில் புதுப்பேட்டை க்கு ஒன்றே இன்றும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது தொடர்ந்து காதல் கதைகளை இயக்கி வந்த செல்வராகவன் முதன்முறையாக இயக்கிய கேங்ஸ்டர் திரைப்படம் என்றால் அது புதுப்பேட்டை தான். புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கொக்கி குமாரு என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.

புதுப்பேட்டை பாகம்-2
இந்த படமும் வெளியான போது அந்த அளவுக்கு ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை ஆனால் இப்பொழுது ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் மேலும் புதுப்பேட்டை பாகம்-2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க புதுப்பேட்டை பாகம் 2 பட வேலைகளில் செல்வராகவன் மும்முரமாக இறங்கியுள்ளார்.

முதலில் சூர்யா, சிம்பு
புதுபேட்டையில் தனுஷ்,சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார்கள் ஆனால் முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா, சிம்பு, தனுஷ் ,ஜெயம் ரவி, ரவி கிருஷ்ணா மற்றும் ஜெனிலியா ஆகியோர் தான் நடிக்க இருந்தார்களாம் ஆனால் அது முற்றிலும் வேற ஸ்கிரிப்ட் அந்த ஸ்கிரிப்ட் பயங்கரமாக இருக்கும் அதை செல்வராகவன் இயக்கவில்லை. வேறு கதையை புதுப்பேட்டை என்ற பெயரில் இயக்கி உள்ளார் என்ற சுவாரஸ்யமான தகவலை ரவிகிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











