கங்குவா 2வுக்கு ரெடியா?.. சிறுத்தை சிவாவுடன் இணைந்து யோக நரசிம்மரை தரிசனம் செய்த சூர்யா!

சென்னை: கங்குவா திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதையை சரியாக விளக்கவில்லை உள்ளிட்ட விமர்சனங்கள் கடுமையாக எழுந்த நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதாகவும் கங்குவா படம் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக கங்குவா 2 படத்தை செய்வோம் என ஞானவேல் ராஜா சமீபத்தில் கூறியிருந்தார்.

கங்குவா படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நடிகர் சூர்யா இதுவரை விமர்சனங்கள் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை. மேலும், படத்தின் சக்சஸ் மீட் உள்ளிட்ட விஷயங்களும் நடைபெறாத நிலையில், கங்குவா 2 படம் உருவாக வாய்ப்பே இல்லை என பல யூடியூபர்கள் பேசி வருகின்றனர்.

kanguva suriya siruthai siva

இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து நடிகர் சூர்யா இன்று சென்னை சோழிங்கரில் உள்ள யோக நரசிம்மர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

கங்குவா 2.0: சிறுத்தை சிவா இயக்கியுள்ள பிரம்மாண்ட படத்தில் பிரான்சிஸ் மற்றும் கங்குவா என இரு காலக்கட்டத்தில் இரு வேறு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து மிரட்டியுள்ளார். சூர்யாவின் உழைப்பை சிறுத்தை சிவா பெரிதும் வீணடித்து விட்டதாக விமர்சகர்கள் முதல் பொது மக்கள் வரை பலரும் கருத்து தெரிவித்தனர். சத்தம் அதிகமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சத்தத்தை குறைத்த படக்குழு அடுத்து ஜோதிகாவின் விமர்சனத்தை தொடர்ந்து முதலில் வரும் 20 நிமிடத்தில் 12 நிமிடக் காட்சிகளை வெட்டி எறிந்து கங்குவா 2.0 படத்தை இந்த வாரம் முதல் தியேட்டரில் வெளியிட்டுள்ளனர்.

ஜோதிகா கேள்வி: நடிகர் சூர்யா கங்குவா படத்தின் ரிலீஸுக்கு முன்பு வரை படத்தை பாலிவுட் முதல் கோலிவுட் வரை எந்தளவுக்கு புரமோட் செய்ய முடியுமோ அந்தளவுக்கு அனைத்து இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து புரமோட் செய்திருந்தார். ஆனால், படம் வெளியான பின்னர் அதுதொடர்பாக வெளியான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அவர் இதுவரை எந்தவொரு அறிக்கையும் விடவில்லை. ஆனால், சூர்யாவுக்கு பதிலாக அவரது மனைவி ஜோதிகா வெளியிட்ட அறிக்கையில், ஒரு நல்ல படத்தை இந்தளவுக்கு மோசமாக விமர்சித்து காலி செய்யக் கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார். பாடகி சுசித்ரா ஜோதிகாவின் கருத்துக்களுக்கு எதிராக பேசியதும் சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளன.

சாமி தரிசனம்: இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா இருவரும் சென்னையில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். அதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவுக்கு கோயில் அர்ச்சகர்கள் மலர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

கங்குவா 2 ரெடியாகுமா?: சூர்யா மற்றும் சிறுத்தை சிவா மீண்டும் சந்தித்துள்ள நிலையில், நிச்சயம் கங்குவா 2 உருவாகும் என்றும் அந்த படத்தின் மூலம் கண்டிப்பாக சிறுத்தை சிவா மற்றும் சூர்யா ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என சூர்யா ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு இருவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்து அஜித்தை வைத்து படம் பண்ணப் போவதாகவும் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விவேகம் மற்றும் அண்ணாத்த படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா அதிக ட்ரோல்களை கங்குவா படத்தின் மூலம் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X