Karuppu Release date: ஒரு மாசம் தான் டைம்.. சூர்யா முழு சப்போர்ட்.. கருப்பு ரிலீஸ் தேதி இதுவா?
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை தயாரிப்பு தரப்பு மூச்சு விடாமல் இருந்து வரும் நிலையில், ஜனவரி மாதமே படம் வெளியாகப் போவதாக சினிமா வட்டாரத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளன.
கருப்பு படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உள்ளிட்ட வியாபாரம் பெரிதாக நடைபெறாமல் இருப்பது தான் கருப்பு படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கு காரணம் என பேச்சுக்கள் அடிபட்டன.

மேலும், வா வாத்தியார், கருப்பு உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பும் இன்னமும் முழுவதுமாக நிறைவேறாமல் உள்ளதாகவும் கூடிய விரைவில் முடித்து ரிலீஸ் செய்யும் வேலையில் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வா வாத்தியார் ரிலீஸ் எப்போ?: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகாது என்றும் டிசம்பர் 12ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதையும் தயாரிப்பு நிறுவனம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. க்ரித்தி ஷெட்டி, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனையாகாமல் இருப்பதால் தான் அந்த படத்தின் ப்ரோமோஷனும் ஆரம்பிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், திட்டமிட்டபடி எல்ஐகே டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என்றே கூறுகின்றனர்.
கருப்பு ரிலீஸ் தேதி இதுவா?: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன், பராசக்தி உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் 2டி நிறுவனமும் இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில், ஜனவரி 23ம் தேதி கருப்பு திரைப்படம் வெளியாகப் போவதாகவும் ஒரு மாத டைமுக்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட வேண்டும் என ஆர்.ஜே. பாலாஜிக்கு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் முடிவில் சூர்யா தீவிரம் காட்டி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
4 நாள் இருக்கு: பொங்கல் விடுமுறையை ஜன நாயகன், பராசக்தி படங்கள் பிடித்து விட்ட நிலையில், ஜனவரி 23ம் தேதி வெள்ளிக்கிழமை படம் வெளியானால் ஜனவரி 26 குடியரசு தினம் திங்கட்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் கருப்பு படம் ஓடினாலே கல்லா கட்டிவிடும் என்கின்றனர். கூடிய சீக்கிரமே படத்தின் வேலைகள் நிறைவடைந்தால், ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக டிசம்பர் மாதம் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











