Vel Paari: ரன்வீர் சிங், யஷ்லாம் இல்லையா?.. வேள்பாரி படத்துல இணையப் போவது சூர்யா, விக்ரமா?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் அடுத்து பிரம்மாண்டமாக 3 பாகங்கள் கொண்ட படமாக வேள்பாரி உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேள்பாரி படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கன்னட நடிகர் கேஜிஎஃப் புகழ் யஷ் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.
ஆனால், தற்போது தமிழ் சினிமா நடிகர்களை வைத்தே வேள்பாரி படத்தை உருவாக்கும் திட்டத்தை தான் இயக்குநர் ஷங்கர் கையில் எடுத்துள்ளதாக கூறுகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஷங்கர் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிதாமகன் படத்தில் இணைந்து நடித்த சூர்யா மற்றும் விக்ரமை வைத்து தமிழில் வேள்பாரி படத்தை உருவாக்கும் திட்டத்தில் தற்போது ஷங்கர் இருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் கசிந்துள்ளன.
ராஜா காலத்து படங்கள்: அதிகப்படியான ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரும் வேலையை 2.0 போன்ற டெக்னாலஜி படங்கள் செய்வதை விட பாகுபலி போன்ற படங்கள் தான் அதிகம் செய்து வருகின்றன. கங்குவா படத்தையே அதை நோக்கித் தான் நடிகர் சூர்யா பிரம்மாண்டமாக உருவாக்கி இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்தால் தமிழ் சினிமாவிலும் ராஜா காலத்து படங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகும் என தெரிகிறது.
வேள்பாரி படம்: இந்தியன் 2 படம் ஷங்கரை கைவிரித்த நிலையில், இந்தியன் 3 படம் எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர். அதனால், தற்போது ஷங்கரின் முழு கவனமும் எப்படியாவது வேள்பாரி படத்தை எடுத்து ரிலீஸ் செய்து மீண்டும் தன்னுடைய பிரம்மாண்ட இயக்குநர் சிம்மாசனத்தில் தான் அமர வேண்டும் என்பது மட்டும் தான் எனக் கூறுகின்றனர்.
சூர்யா, விக்ரம்: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்திருந்தார். வேள்பாரி படத்திலும் அவரை நடிக்க வைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. மேலும், கேஜிஎஃப் படத்தின் மூலம் மிகப்பெரிய பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள யஷ் லீடு ரோலில் நடிக்க வேள்பாரி உருவாகும் என்றனர். ஆனால், தற்போது சூர்யா மற்றும் சியான் விக்ரமை வைத்து வேள்பாரி படத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருப்பதாக கூறுகின்றனர்.
லீடு ரோலான வேள்பாரி கதாபாத்திரத்தில் சூர்யாவும் பாண்டிய மன்னன் கதாபாத்திரத்தில் விக்ரமையும் நடிக்க வைக்க தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர். மேலும், சில பிரபல நடிகர்களும் இந்த படத்தில் இணைவார்கள் என்றும் பொன்னியின் செல்வன் படத்தை போல பிரம்மாண்ட காஸ்டிங் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யாவுக்கான செக்கா?: சமீபத்தில், இயக்குநர் ஷங்கர் வேள்பாரி கதையின் காட்சிகள் படங்களில் இடம்பெறுவது குறித்த எச்சரிக்கையை விடுத்ததே சூர்யாவை தனது படத்திற்குள் கொண்டு வருவதற்காக வைக்கப்பட்ட செக்மேட்டாக இருக்குமோ? என்கிற கேள்வியையும் சினிமா வட்டாரத்தில் பலர் எழுப்பி வருகின்றனர். சைலன்ட்டாக சுமூக பேச்சுவார்த்தைகள் மூலமாக கங்குவா படத்துக்கு எந்தவொரு பாதிப்புமின்றி டீலிங் முடிந்து விட்டது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











