பொன்மகள் வந்தாள் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. செம குஷியில் சூர்யா, ஜோதிகா ரசிகர்கள்!

சென்னை: ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள 'பொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை சூர்யா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Recommended Video

Ponmagal Vandhal Director latest | OTT platform • Surya, Jothika, JJ. Fedrick

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த படம் கோர்ட் டிராமாவாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த மாத இறுதியில் அமேசான் பிரைமில் படம் ரிலீசாக உள்ள நிலையில், டிரைலர் ரிலீஸ் தேதியை சூர்யா டிவீட் செய்துள்ளார்.

நேரடியாக ஆன்லைனில்

நேரடியாக ஆன்லைனில்

ஆன்லைனில் நேரடியாக புதுப்படங்களை வெளியிடலாமா? கூடாதா? என்ற விவாதங்களும், வெளியிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்ற தியேட்டர் உரிமையாளர்களின் எச்சரிக்கைகளை கடந்தும் வரும் மே 29ம் தேதி ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் அமேசான் பிரைமில் ரிலீசாகப் போகிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

இயக்குநர் ஜே.ஜே. பிரெடரிக் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஜோதிகாவுடன், பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோர்ட் டிராமாவாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த லாக்டவுனில் ரசிகர்கள் கண்டு ரசிக்கப் போகும் புதிய படமாக இது வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோர்ட் டிராமா

கோர்ட் டிராமா

பல ஜாம்பவான் நடிகர்கள் வக்கீல் கோட் போட்டுக் கொண்டு ஜோதிகாவை எதிர்த்து வாதாட உள்ள இந்த படம் கோர்ட் டிராமாவாக உருவாகி இருக்கிறது. "தாமதமாக கிடைக்கப்படும் நீதி, அநீதிக்கு சமம்" என்ற தாராக மந்திரத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

பாலிவுட், கோலிவுட், மலையாள படம் என ஒட்டுமொத்த சினிமா உலகமே OTT ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், அந்த பூனைக்கு மணி கட்டும் முதல் பணியை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து செய்ய உள்ளனர். வரும் மே 21ம் தேதி பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார். தற்போது அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குஷியில் ரசிகர்கள்

குஷியில் ரசிகர்கள்

ஜோதிகா நடிப்பில் விரைவில் நேரடியாக ஆன்லைனில் ரிலீசாக உள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் ப்ரீமியரை காண சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டதும் அவரது ரசிகர்கள் வாழ்த்தியும், பாராட்டியும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

சூரரைப் போற்று எப்படி?

சூரரைப் போற்று எப்படி?

பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூரரைப் போற்று படமும் நேரடியாக அமேசான் பிரைமிலேயே வெளியாகுமா? அல்லது தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். சீக்கிரமே அதற்கான பதிலையும் சூர்யா மற்றும் சூரரைப் போற்று தரப்பு அறிவிக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X