இப்ப வந்து மோதுடா.. சூரரை போற்று டிரைலர் ரிலீஸ் எப்போ தெரியுமா? சூர்யாவே சொல்றாரு பாருங்க!
சென்னை: சூரரைப் போற்று டிரைலர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படம் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அட்டகாசமாக இசையமைத்துள்ளார்.

கடைசி நேரத்தில் பிரச்சனை
சூரரைப் போற்று படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துக் கொண்டே இருக்கின்றன. தியேட்டரில் வெளியாகும் என உறுதி அளித்த படம் காலத்தின் கட்டாயத்தால், கடைசியில் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. அதிலும், சில சட்டச் சிக்கல்கள் கடைசி நேரத்தில் ஏற்படவே ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

மெர்சல் டீசர்
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சூர்யாவின் சூரரைப் போற்று டீசர் வெளியாகி, "லூசுக் கூ" வசனம் எல்லாம் இடம் பெற்று காட்டுத் தீ போல டிரெண்டானது. வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவை இந்த படத்தில் செம பெண்டு எடுத்துள்ளனர். சுதா கொங்கராவை பற்றி பேசும் போதெல்லாம் ராட்சசி என்றும் ட்ரில் மாஸ்டர் என்றுமே சூர்யா சொல்லும் போதே, படத்தின் தரம் தெரிகிறது.
டிரைலர் எப்போ
இந்நிலையில், தற்போது சூர்யா, தனது வாடிவாசல் படத்திற்கான நியூ லுக்கில் வீடியோ வெளியிட்டு, சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 26ம் தேதி விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணிக்கு அமேசான் பிரைமில் வருகிறது என்கிற சூப்பரான அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். சூர்யாவின் தரிசனம் கிடைத்ததே ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் தான்.

ராக்கெட் செஞ்சு விடுறாரு
பேப்பரில் ராக்கெட்டை செய்த படியே, ஆங்கிலத்தில் சூரரைப் போற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆவது மட்டுமின்றி, 200 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருப்பதால், சூர்யா ஆங்கிலத்தில் ஒரே வீடியோவாக பேசி வெளியிட்டு இருக்கிறார்.
அயன் பட தேவா
நடிகர் சூர்யாவின் இந்த புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள், 2009ம் ஆண்டு வெளியான அயன் படத்தில் தேவா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது போலவே இன்னமும் இருக்கிறார் என இந்த ரசிகர் குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளார். சூர்யா வீடியோ வெளியிட்டு இந்த அறிவிப்பை சொன்னதை பர்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகி விட்டனர்.
மாறா கம்மிங்
சூரரைப் போற்று முன்னாடி ரிலீஸ் ஆகுமா? இல்லை மாஸ்டர் ரிலீஸ் ஆகுமா? என்கிற போட்டிகள் இருந்த நிலையில், தற்போது சூரரைப் போற்று ஒடிடி தளத்தில் முன்னதாக வெளியாகிறது. விமானப் படையிடம் இருந்து வரவேண்டிய என்.ஓ.சி சான்றிதழ் தாமதம் காரணமாக படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30ம் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











