சோகத்திலும் ஒரு சந்தோஷமான செய்தி.. கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு ரூ.5 கோடி நிதி.. சூர்யா அறிக்கை!

சென்னை: சூரரைப் போற்று தியேட்டரில் ரிலீஸ் இல்லை OTTல் தான் ரிலீஸ் என்ற அறிவிப்பை கேட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் மொத்தமும் சந்தோஷப்படுவதா? துக்கப்படுவதா? என்றே தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

Recommended Video

Surya Soorarai Pottru OTT Release | பின்னணி என்ன?

வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் வெளியாகிறது.

மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் 5 கோடி ரூபாயை கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நிதியாக அளிக்கப் போவதாக நடிகர் சூர்யா அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

தொழில் முடக்கம்

தொழில் முடக்கம்

இந்த நீண்ட பெரிய கொரோனா லாக்டவுன் காரணமாக ஏகப்பட்ட தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. அதில், சினிமா துறையும் ஒன்று. மார்ச் பாதியில் மூடப்பட்ட தியேட்டர்கள், இந்த ஆண்டு தீபாவளிக்கு கூட திறக்குமா? திறக்காதா? என்ற சந்தேகத்தில் உள்ளது. இதனால், ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களை OTTல் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்து வருகின்றனர்.

ஜோதிகா டு சூர்யா

ஜோதிகா டு சூர்யா

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தான் தமிழில் முதன்முறையாக இந்த OTT பூனைக்கு மணிக்கட்டியது. சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்ட அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலக்‌ஷ்மி சரத்குமாரின் டேனி, ஒன்பது குழி சம்பத், லாக்கப் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தியேட்டரில் ரசிகர்களுடன் பார்க்க ஆசை

தியேட்டரில் ரசிகர்களுடன் பார்க்க ஆசை

பொன்மகள் வந்தாள் படத்தின் OTT ரிலீஸின் போது நிச்சயம் சூரரைப் போற்று திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என சூர்யா உறுதி அளித்து இருந்தார். இந்நிலையில், தற்போது ஒரு தயாரிப்பாளராக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனக்கும் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கத் தான் ஆசை, ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில் அது முடியாமல் போயுள்ளது என்றார்.

சோகத்தில் ரசிகர்கள்

சோகத்தில் ரசிகர்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு பயங்கர ஷாக்கிங்காகவே உள்ளது. மேலும், சூர்யாவின் ரசிகர்கள் சூரரைப் போற்று படத்தை சீக்கிரம் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், தியேட்டரில் வெளியாகவில்லையே என்ற வருத்தத்தை சூர்யாவிடமே வெளிப்படுத்தி வருகின்றனர்.

5 கோடி நிதியுதவி

5 கோடி நிதியுதவி

மேலும், சூரரைப் போற்று படத்தின் OTT ரிலீஸ் மூலமாக வரும் வருமானத்தில் 5 கோடி ரூபாயை கொரோனாவை எதிர்த்து போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நிதியாக அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் சூர்யா தனது அறிக்கையில் கூறியிருப்பது சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல காரியத்திற்காகத் தான் சூர்யா இதனை செய்கிறார் என்பதை அறிந்து உற்சாகம் ஊட்டி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X