ஜி.வி. பிரகாஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா: ஏதோ பெருசா இருக்கு...
Recommended Video

சென்னை: சூர்யாவே இப்படி செய்திருக்கிறார் என்றால் நிச்சயம் காரணம் இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதிச் சுற்று படம் புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். அந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
சூர்யா படத்திற்கு இசையமைக்கும் பணியை துரிதமாக முடித்துவிட்டார் ஜி.வி. பிரகாஷ்.
வாழ்த்து
ஜி.வி. பிரகாஷ் போட்ட இசையை கேட்டு சூர்யா அசந்துவிட்டார். இதையடுத்து ஜி.வி.யை பாராட்டி தனது கைப்பட ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, பூங்கொத்து கொடுத்துள்ளார் சூர்யா. புல்லரிக்கிறது, மேஜிக் என்று சூர்யா எழுதிய துண்டுச் சீட்டு மற்றும் பூங்கொத்தை புகைப்படம் எடுத்து ஜி.வி. ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ்
திறமைசாலிகளை பாராட்ட தயங்காதவர் சூர்யா. ஆனால் அவர் இப்படி கைப்பட துண்டுச் சீட்டில் எழுதி அனுப்பி பாராட்டியிருக்கிறார் என்றால் ஜி.வி. பிரகாஷின் இசை வேற லெவலாக இருக்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
பயம்
என்.ஜி.கே. படம் போன்று இந்த படமும் இழுத்துக் கொண்டு போய்விடுமோ என்று சூர்யா ரசிகர்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் இப்படி ஒரு ட்வீட்.

வாழ்க்கை வரலாறு
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ஏர் டெக்கன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது. கஜினிக்கு பிறகு சூர்யாவை மீண்டும் ஸ்டைலான தொழில் அதிபராக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











