Suriya: ”சூர்யாவுக்காக ஸ்க்ரிப்ட் ரெடி... தமிழில் தரமான சம்பவம்..” அயலான் இயக்குநரின் செம்ம அப்டேட்

சென்னை: இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார்.

இரண்டாவதாக அவர் இயக்கியுள்ள அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணி இணையவுள்ளது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்காக சூப்பரான ஸ்க்ரிப்ட் ஒன்று ரெடியாக இருப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 Suriya: Ayalaan director Ravikumar will team up with Suriya

சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்
2015ம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. விஷ்ணு விஷால், கருணாகரன் நடித்திருந்த இந்தப் படத்தை ரவிக்குமார் இயக்கியிருந்தார். டைம் ட்ராவல் பின்னணியில் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக வெளியான 'இன்று நேற்று நாளை' ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் ரவிக்குமார். அதன்படி, 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் அடுத்தாண்டு தான் வெளியாகவுள்ளது. கொரோனா லாக் டவுன், பட்ஜெட் பிரச்சினை என அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்ததால் அயலான் ரிலீஸ் தள்ளிக்கொண்டே சென்றது. கடந்த மாதம் வெளியான அயலான் டீசர், இப்படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படமும் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிரட்டலாக உருவாகியுள்ள அயலான், சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் ரிலீஸுக்காக 6 ஆண்டுகள் வரை பொறுமையாக இருந்த ரவிக்குமாருக்காக, மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அதன்பின்னர் சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளாராம் ரவிக்குமார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக ரவிக்குமார் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 Suriya: Ayalaan director Ravikumar will team up with Suriya

இந்தப் படமும் சயின்ஸ் பிக்‌ஷனுடன் அபோகாலிப்டிக் படமாக இருக்கும் என ரவிக்குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கங்குவா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், வாடிவாசல் என சூர்யாவின் லைன்அப் பிஸியாக உள்ளது. அதன்பின்னர் ரவிக்குமார் - சூர்யா கூட்டணி இணையும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X