மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய சூர்யா...மாஸ் வீடியோவை வைரலாக்கி பட்டய கிளப்பும் ரசிகர்கள்
சென்னை : பிப்ரவரி 9 ம் தேதி நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், பூர்ணமாக குணமடைந்தார். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, சமீபத்தில் முதல் முறையாக மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இன்று முதல் சூர்யா 40 படப்பிடிப்பில் சூர்யா மீண்டும் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. இந்நிலையில் நீண்ட தலைமுடியுடன் வேட்டி - சட்டையில் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பது போன்ற மாஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பெரிய காளை மாடு ஒன்றின் அருகில் நின்று, ரசிகருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் இந்த வீடியோ தான் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது சூர்யா 40 அல்லது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கா என தெரியவில்லை.
#VaadiVaasal 🐃 practice today @Suriya_offl anna❤
— Suriya Fans Trend™ (@Suriyatrendoffl) March 14, 2021
Sambavam loading🤯🔥#Suriya40 #Navarasa pic.twitter.com/JcYoH1EPxB
பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்திலும் ஒரே சமயத்தில் சூர்யா நடித்து வருவதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











