ஆரம்பிக்கலாமா...சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்...நாளை சிடிபி ரிலீஸ்
சென்னை : நடிகர் சிவக்குமாரின் முத்த மகனான சூர்யா, நேருக்கு நேர் படத்தின் முலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பல படங்களில் நடித்தாலும் டைரக்டர் பாலா இயக்கிய நந்தா படம் தான் சூர்யாவிற்கு முதல் கமர்ஷியல் வெற்றியை கொடுத்தது.
நந்தாவை தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்கள் சூர்யாவின் இமேஜை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தின. பல கமர்ஷியல் வெற்றி படங்களைக் கொடுத்த சூர்யா, கொரோனா சமயத்தில் ஒட்டுமொத்த உலகமே முடங்கி இருந்த சமயத்தில் சூரரைப் போற்று படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்து அதிலும் வெற்றி பெற்றார்.

சூரரைப் போற்று படம் 30 க்கும் மேற்கொண்ட சர்வதேச விருதுகளை வென்று, ஆஸ்கார் வரை சென்றது. அதைத் தொடர்ந்து ஜெய்பீம் படமும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு, சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
சூர்யா ஹீரோவாக நடித்தை விட சமீபத்தில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்த கேரக்டர் தான் சூர்யாவிற்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. படம் வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் ரசிகர்கள் தற்போது வரை சூர்யாவை ரோலக்ஸ் சார் என்று தான் குறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜுலை 23 ம் தேதி சூர்யா தனது 47வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். சூர்யாவின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். ரத்த தானம், அன்ன தானம் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 41 படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் டைரக்டர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ஒன்றை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீ கிளாஸ், பக்கத்தில் காப்பு இருப்பது போன்ற போஸ்டர் இதற்காக வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா பிறந்தநாளன்று வாடிவாசல், சூர்யா 42 படங்களின் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிடிபி வெளியிடப்பட உள்ளதால், இந்த பிறந்தநாள் சூர்யாவிற்கு மிகச் சிறந்த பிறந்தநாளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











