தெறிக்கவிடும் சூர்யா பர்த்டே மாஷப் வீடியோ.. பிரபலங்கள் வெளியீடு.. வெறித்தனம் காட்டும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாள் வரும் ஜூலை 23ம் தேதி வருகிறது.
இந்நிலையில், சூர்யாவின் பர்த்டே மாஷப் வீடியோக்களை திரை பிரபலங்களான நடிகை சாயிஷா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் காமன் டிபியை தென்னிந்தியாவை சேர்ந்த 100 திரை பிரபலங்கள் வெளியிட்டு இருந்தது மிகப்பெரிய சாதனையாக மாறியது.

அன்பான ஹீரோ
நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வரும் ஜூலை 23ம் தேதி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அன்பான ஃபேன்ஸ் ஏகப்பட்ட சமூக வலைதள சாதனைகளை புரிந்தும் புரியவும் திட்டமிட்டு வருகின்றனர். கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக சூர்யாவும் இருந்து வருகிறார் என்பது மறைக்க முடியாத உண்மை.
போட்டி போட்டு கொண்டாட்டம்
முன்னணி நடிகர்களின் பிறந்தநாளை சமூக வலைதளத்தில் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடுவதை ரசிகர்கள் தற்போது நியூ நார்மலாகவே மாற்றி விட்டனர். அதிலும், எந்த நடிகரின் பிறந்தநாள் சமூக வலைதளத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது போன்ற போட்டிகளும் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.

சூர்யாவின் பர்த்டே மாஷ் அப்
பிறந்தநாள் காமன் டிபியை 100 பிரபலங்களை வைத்து சூர்யா ரசிகர்கள் ரிலீஸ் செய்து தெறிக்கவிட்ட நிலையில், தற்போது அட்டகாசமான பர்த்டே மாஷ்ப் ஒன்றை A2 ஸ்டூடியோஸ் உருவாக்கி இருக்கிறது. நடிகை சாயிஷா, உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு வாழ்த்து
சூப்பர்நோவா சூர்யா என்ற மற்றொரு மாஷப் வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கிறார். சூர்யா கடந்து வந்த பாதை, பட்ட அவமானங்கள், கிண்டல் பேச்சுக்கள் என பலவற்றை கடந்து எப்படி பாக்ஸ் ஆஃபிஸ் கிங் ஆனார் என்பதை மாஷ் அப் வீடியோவில் தெறிக்கவிட்டுள்ளனர். சூர்யாவுக்கு வெங்கட் பிரபு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











