எங்களை தாண்டி தான் சூர்யாவை தொடணும்.. #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: ஜெய்பீம் படத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

உலகளவில் IMDB ரேட்டிங்கில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், சூர்யாவுக்கு எதிரான அரசியல் மிரட்டல்கள் இங்கே கிளம்ப ஆரம்பித்துள்ளன.

உலகளவில் முதலிடம்

உலகளவில் முதலிடம்

ஹாலிவுட்டின் மிகச் சிறந்த படங்களான The God Father, The Shawshank Redemption உள்ளிட்ட படங்களை பின்னுக்குத் தள்ளி உலகளவில் IMDB ரேட்டிங் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம். லாக்கப் டெத் பற்றியும், விளிம்பு நிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும், அதிகார துஷ்பிரயோகம் பற்றியும் எடுக்கப்பட்ட இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

ஒரு பக்கம் ஜெய்பீம் திரைப்படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், இன்னொரு பக்கம் அந்த படத்தை சில கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். ஜெய்பீம் படத்தில் வில்லனாக நடித்து இருந்த எஸ்ஐ குருமூர்த்தி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவரது வீட்டில் மாட்டியிருந்த தீச்சட்டி காலண்டர் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாமக கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு கடிதம் அனுப்பி இருந்தார்.

சூர்யா பதில்

சூர்யா பதில்

மிரட்டும் தொனியில் இருந்த அந்த கடிதத்திற்கு கொஞ்சமும் அஞ்சாமல் எதற்கும் துணிந்தவனாக சூர்யா அளித்த பதில் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் ஜெய்பீம் படத்தை எதிர்த்த நிலையில், திருமாவளவன், சரத்குமார் உள்ளிட்ட பலர் ஜெய்பீம் மற்றும் சூர்யாவை பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவுக்கு துணை நிற்போம்

சூர்யாவுக்கு துணை நிற்போம்

இந்நிலையில், #WeStandWithSuriya என்ற ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் தற்போது டிரெண்ட் செய்து தங்கள் பலத்தை சமூக வலைதளம் வாயிலாக காண்பித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவுக்கு எந்தவொரு மிரட்டலையும் அரசியல் ரீதியாக வைக்கக் கூடாது என்றும் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் சூர்யா ரசிகர்கள் ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

சூர்யாவின் ஹேட்டர்கள் உன் அடுத்த படம் எப்படி ரிலீஸ் ஆகுதுன்னு பார்த்துருவோம் என கமெண்ட் அடிப்பது போலவும் என் அடுத்த படமே எதற்கும் துணிந்தவன் தான் டா என சூர்யா சொல்வதும் போல உள்ள மீமை சூர்யா ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

என்ன நடந்தாலும்

என்ன நடந்தாலும்

ஜெய்பீம் போன்ற சமூக கருத்துக்கள் கொண்ட படம் பலருக்கும் பலன் அளித்து வரும் நிலையில், சிலர் மட்டும் சாதி ரீதியாக அதனை எதிர்ப்பது சரியல்ல என்றும் அவர்கள் சாதிய அரசியலை தான் செய்கின்றனரா என்கிற கேள்வியையும் அது எழுப்புகிறது என்றும் என்ன நடந்தாலும் சூர்யா அண்ணாவுடன் துணை நிற்போம் என அவரது ரசிகர்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

எங்களை தாண்டி தான்

எங்களை தாண்டி தான்

எங்களை தாண்டி தான் சூர்யா அண்ணனை தொடணும் என நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எதிர்ப்புகளை தெரிவித்து வருபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X