Suriya: "லோகேஷ் தான் என் அடையாளத்தை மாற்றினார்... நோகாம நோம்பி கும்பிட்டதா..?” விளாசிய ப்ளூ சட்டை!

சென்னை: கார்த்தியின் ஜப்பான் பட இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கார்த்தியின் அண்ணன் சூர்யா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 Suriya: Blue Sattai Maran trolls Suriya for praising Lokesh Kanagaraj

அப்போது பேசிய சூர்யா, லோகேஷ் கனகராஜ் தான் தன் அடையாளத்தை மாற்றியதாகக் கூறியிருந்தார்.

இதனை, "ரெண்டு நிமிசம் நோகாம நோம்பி கும்புட்டதா?" என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

சூர்யாவை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ளது ஜப்பான். ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், ஜப்பான் ட்ரெய்லரும் வெளியானது.

இந்நிகழ்ச்சியில், சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், நடிகர்கள் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, இயக்குநர்கள் வினோத், சிறுத்தை சிவா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது பேசிய சூர்யா, "படிப்பு முடிந்ததும் கார்மெண்ட்ஸ் பிசினஸ் உட்பட எல்லா பக்கமும் ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு தான் சினிமாவுக்கு வந்தேன். என்னுடைய பாணியும் கார்த்தியின் பாணியும் வெவ்வேறானது."

 Suriya: Blue Sattai Maran trolls Suriya for praising Lokesh Kanagaraj

"கைலி கட்டுவது, மது அருந்துவது போன்ற காட்சிகளோடு எதாவது கதை வந்தால், அதை கார்த்தியிடம் அனுப்பி விடுவேன். லோகேஷ் கனகராஜ் தான் அந்த தோற்றத்தை மாற்றினார். ரோலக்ஸ் மாதிரி ஒரு கேரக்டர் கொடுத்து எனது அடையாளத்தையே மாற்றிக் காட்டினார். சிவா இயக்கும் கங்குவா கொண்டாட்டமாக இருக்கும். அதேபோல் கைதி 2 முடிந்ததும் ரோலக்ஸ் படம் உருவாகும்" எனவும் பேசியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில், ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். சில நிமிடங்களே படத்தில் வரும் இந்த ரோலக்ஸ் கேரக்டர், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் அந்த கேரக்டரை வைத்து தனியாகவே ஒரு படம் இயக்க ரெடியாகிவிட்டார் லோகேஷ். இதனால் தான் சூர்யாவும் லோகேஷை புகழ்ந்திருந்தார்.

 Suriya: Blue Sattai Maran trolls Suriya for praising Lokesh Kanagaraj

இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், வழக்கம் போல சூர்யாவை வச்சு செய்துள்ளார். "எது? சட்டைல தக்காளி சட்னிய ஊத்திக்கிட்டு.. செட்டுக்குள்ள ரெண்டு நிமிசம் நோகாம நோம்பி கும்புட்டதா?" என கேள்வி எழுப்பியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X