எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் ஜோவுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. சூர்யா 40 என குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

 ஜோதிகாவும் பங்கேற்பு

ஜோதிகாவும் பங்கேற்பு

இந்நிலையில் நடிகர் சூர்யா, எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகை ஜோதிகாவும் சூர்யாவுடன் உள்ளார்.

போட்டோக்கள் வெளியீடு

போட்டோக்கள் வெளியீடு

மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் சத்தியராஜ், எம்எஸ் பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் பாண்டிராஜ் உட்பட பலரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சூர்யா கேக் வெட்டும் போட்டோக்களை எதற்கும் துணிந்தவன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஜெய் பீம்

ஜெய் பீம்

இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யாவையும் ஜோதிகாவையும் ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜெய் பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X