அப்பாவை விட ஹைட்டா வளர்ந்துட்டாரே.. அச்சு அசல் ஜோதிகா தான்.. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய சூர்யா

சென்னை: நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் பிரியப் போவதாகவும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என சில விஷமிகள் சோஷியல் மீடியாவில் வதந்திகளை கட்டவிழ்த்து வந்த நிலையில், அதற்கெல்லாம் தொடர்ந்து தனது பேட்டி மூலம் பதிலளித்து வந்த சூர்யா தற்போது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி அனைத்து வதந்திகளுக்கும் பெரிய முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில், நடைபெற்ற கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ஜோதிகா ஏன் பங்கேற்கவில்லை என்கிற கேள்விகள் எழுந்தன.

suriya jyothika diwali 2024

ஜோதிகா பாலிவுட்டில் பிஸியாகி வரும் நிலையில், சூர்யா கங்குவா படத்தின் புரமோஷனுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். இந்நிலையில், தீபாவளி விடுமுறையை இருவரும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.

சூர்யா வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்: நடிகர் சூர்யா மும்பையில் புதிதாக வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ள நிலையில், தனது மனைவி ஜோதிகா மற்றும் மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் இணைந்து புத்தாடைகளை அணிந்துக் கொண்டு தீபாவளியை கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. சூர்யா மற்றும் அவரது குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் குடும்பம் என கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

அப்பாவை விட ஹைட்: சூர்யாவின் மகன் தேவ் அப்பாவை போலவே வேட்டி சட்டை அணிந்துக்கொண்டு அவர் அருகே நிற்க சூர்யாவை விட நல்ல உயரமாக தேவ் வளர்ந்துவிட்டாரே என்றும் சீக்கிரமே தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோ வரப்போகிறாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று வரும் தேவ் ஹீரோ மெட்டீரியலாக ரெடியாகி விடுவார் என்றே தெரிகிறது.

suriya jyothika diwali 2024

அச்சு அசல் ஜோ தான்: கல்லூரியில் படிக்க ஆரம்பித்தவுடனே ஆவண குறும்படத்தை இயக்கி இயக்குநராக மாறியுள்ள தியா அப்படியே அச்சு அசல் அம்மா ஜோதிகாவை போலவே இருக்கிறார் என்றும். ஜோதிகா அளவுக்கு உயரமாக தியா வளர்ந்துவிட்டார் என்றும் ரசிகர்கள் பார்த்து பூரித்துப் போயுள்ளனர்.

கங்குவா கர்ஜிக்கும்: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை விட விஜய்யின் கோட் திரைப்படம் வசூல் ரீதியாக அதிக கலெக்‌ஷனை அள்ளியிருக்கிறது. இந்நிலையில், சூர்யாவின் கங்குவா திரைப்படம் கோட் படத்தின் வசூலை முறியடித்து கர்ஜிக்கும் என சூர்யா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X