முத்தையாவை தேர்வு செய்த சூர்யா: அப்போ ரஞ்சித் அவரிடம் போவாரோ?
சென்னை: ரஞ்சித்தை காக்க வைத்துவிட்டு முத்தையாவின் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சூர்யா.
சூர்யா ஹரி இயக்கத்தில் எஸ்.3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவரை வைத்து படம் எடுக்க முத்தையாவும், பா. ரஞ்சித்தும் விரும்பினர். இருவருமே சூர்யாவை சந்தித்து ஒரு வரியில் கதை சொல்லியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹரியின் படத்தை முடித்த பிறகு கொம்பன் புகழ் முத்தையாவின் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அடுத்த ஆண்டு ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுக்கிறாராம் சூர்யா.
முத்தையாவின் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். முத்தையா சூர்யாவுக்காக நல்ல குடும்பக் கதையாக தயார் செய்து வைத்துள்ளாராம். ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் ஆசையாக உள்ளார்.
ஒரு வேளை இந்த கேப்பில் ரஞ்சித் விஜய்யை இயக்க சென்றுவிடுவாரோ?


Click it and Unblock the Notifications











