வெற்றிமாறனின் வாடிவாசல் படத்துக்கான டெஸ்ட் லுக்கை முடித்த சூர்யா.. விரைவில் படப்பிடிப்பு!
சென்னை: நடிகர் சூர்யா வாடிவாசல் படத்துக்கான டெஸ்ட் ஷூட்டை முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் சூர்யா. எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அசால்ட்டாக செய்து முடித்து விடுவார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சூர்யா, தற்போது பாண்டிராஜ் இயக்கும் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார்.

கிராமத்து இளைஞர்
இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதில் கிராமத்து இளைஞராக நடிக்கிறார் சூர்யா.

சூரியை வைத்து..
இந்நிலையில் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட்டுக்காக முதற்கட்ட போட்டோ ஷூட்டை முடித்துள்ளார் சூர்யா. வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

வாடிவாசல் தேதி
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என தெரிகிறது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புக்கான தேதியை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தற்காலிக பெயர்
அதற்குள் சூர்யாவும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40வது படத்தை முடித்து விடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 40 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ்
இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சத்யாராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிராம பின்னணியில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











