Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மதுரை பின்னணியில் அதிரடியாக அடுத்த படம் ஆரம்பிக்கிறார் பாலா... சூர்யா கெஸ்ட் ரோல்.. அப்ப ஹீரோ?
சென்னை: இயக்குனர் பாலா அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் பாலா, விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கும் வர்மா படத்தை இயக்கி இருந்தார். இது தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்.
இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பு தரப்புக்கும் இயக்குனர் பாலாவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
அர்ஜூன் ரெட்டி ரீமேக்
இதையடுத்து இந்தப் படத்தை வெளியிடாமல் தயாரிப்புத் தரப்பு நிறுத்தி வைத்தது. பின்னர், கிரிசாயா என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கை ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் தயாரித்தது. இதனால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது.
கொடைக்கானல்
இதையடுத்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அறிவிக்காமல் இருக்கும் இயக்குனர் பாலா, 'ஜோசப்' என்ற மலையாள படத்தின் ரீமேக்கை தயாரித்து வருகிறார். இதில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் கொடைக்கானல் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
ஆர்யா, அதர்வா
இந்நிலையில் அவர் ஆர்யா, அதர்வா நடிக்கும் படத்தை அடுத்து இயக்க இருக்கிறார். மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகர் சூர்யாவும் ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் ஹீரோவாக நடிக்கவில்லை.
Recommended Video
கெஸ்ட் ரோலில்
'பாலா இயக்கும் படத்தில், ஆர்யா, அதர்வாதான் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நடிகர் சூர்யா, அவன் இவன் படத்தில் நடித்தது போல, கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிக்கிறார்' என்று சூர்யாவுக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது எனத் தெரிகிறது.