சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்.. மாஸ் என்ட்ரியாகும் சூர்யா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சென்னை : சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது .

டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகிய இப்படம் ஹிந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா

இயக்குனர் சுதா கொங்கரா

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் தமிழில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதிலும் சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய சூரரைப்போற்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சூரரைப்போற்று

சூரரைப்போற்று

இந்திய அளவில் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியானது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதை தொடர்ந்து தற்போது சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

சூரரைப்போற்று இந்தி ரீமேக்

சூரரைப்போற்று இந்தி ரீமேக்

இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவே இந்தியில் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நடிகை ராதிகா மதன்

நடிகை ராதிகா மதன்

இந்த படத்தில் தமிழ் மொழியில் நடித்த அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். இவர் பிரபல இந்தி சீரியல் நடிகை ஆவார். கலர்ஸ் டிவியின் காதல் மெகா சீரியலான மேரி ஆஷிகி தும் சே ஹியில் இஷானி வகேலாவாக நடித்ததற்காக புகழ்பெற்றவர்.

சிறப்பு வேடத்தில் சூர்யா

சிறப்பு வேடத்தில் சூர்யா

இந்த நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் கௌரவ வேடத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அக்ஷய் குமாருடன் இந்த படத்தின் கேரக்டர் கெட்டப்புடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், இப்படத்தில் கௌர வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X