அம்மா பக்கம் வேண்டாம்.. அப்பா பக்கமே போவோம்.. தெளிவா ரூட்டை போட்ட சூர்யா மகள்.. சீக்கிரமே இயக்குநர்!
சென்னை: நடிகர் சூர்யாவுடன் தொடர்ந்து அவரது மகள் தியா பயணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இருந்து மும்பைக்கு கல்லூரி படிப்பிற்காக சென்ற தியா சமீபத்தில் பட்டம் பெற்ற நிலையில், சினிமாவில் இயக்குநராக முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.
தாத்தா, அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியம்மா என குடும்பமே நடிகர்களாக உள்ள நிலையில், இயக்குநராக வேண்டும் என்கிற முடிவை தியா எடுத்தது சிறப்பான விஷயம் என சூர்யா ரசிகர்களும் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

ஷங்கர் மகள் போல ஹீரோயினாக சூர்யாவின் மகள் நடிக்க வராமல், விஜய்யின் மகன் போல இயக்குநராக முடிவு செய்திருப்பது சிறப்பான விஷயம் என பலரும் பாராட்டி வரும் நிலையில், தந்தையுடன் சினிமாவில் பயணிக்க தியா முடிவு செய்துள்ளார் என்றும் விமான நிலையத்தில் சூர்யாவுடன் தியா வந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் உதவி இயக்குநராக போகிறார் என்றும் கூறி வருகின்றனர்.
குறும்படம் இயக்கிய சூர்யா மகள்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டமும் பெற்று விட்டார். கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போதே, கல்லூரி புராஜெக்ட்டாக தியா இயக்கிய லைட் உமன்கள் குறித்த குறும்படம் "Leading Light" பலரது கவனத்தை பெற்றது. 13 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த குறும்படத்தில் லைட் மேன்கள் போல பெண்களும் அந்த துறையில் பணியாற்றி வருவதை எடுத்துக் காட்டி, சில பிரபல லைட் உமன்கள் தங்கள் அனுபவத்தை பகிரும் ஆவணக் குறும்படமாக இயக்கி இருந்தார்.
விமான நிலையத்தில் அப்பாவுடன்: மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு கிளம்பிச் சென்று நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூர்யா கலந்துக் கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஜோதிகா பங்கேற்கவில்லை. விமான நிலையம் வரை சூர்யாவுடன் மகள் தியா தான் வந்துள்ளார். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் நடந்துச் சென்ற காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

வெங்கி அட்லூரியிடம் உதவி இயக்குநர் ஆகிறாரா?: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் லப்பர் பந்து ஹீரோயின் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, நடிகர் ரகுமானின் மகள் அலீஷா ரஹ்மான் மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் என 3 பெண்கள் உதவி இயக்குநர்களாக பணியாற்றினர். இந்நிலையில், சூர்யா அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் அவருடைய மகள் தியா உதவி இயக்குநராக பணியாற்றப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நல்ல வாய்ப்பு: அம்மா ஜோதிகாவுடன் செல்லாமல், அப்பா சூர்யாவுடன் அவரது படங்களில் பணியாற்ற சென்றால், சீக்கிரமே பெரிய இயக்குநராக தியா மாறிவிடுவார் என்றும் விரைவில் அம்மா அல்லது அப்பாவை வைத்து அவர் படம் இயக்கினால், அதை விட பெரிய சந்தோஷம் என்ன இருக்கப் போகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் படம் டிராப் ஆகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டாலும், கலைப்புலி எஸ். தாணு அந்த படம் நிச்சயம் உருவாகும் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











