சூர்யா மகள் தியா இயக்கிய டாக்குமெண்டரி பார்த்தீங்களா?.. ஆணாதிக்கம் பற்றிய மாற்று பார்வை சூப்பர்!
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா இயக்கியுள்ள டாக்குமெண்டரி குறும்படம் தான் தற்போது சினிமா உலகத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. 2டி தயாரிப்பு நிறுவனத்துக்கு புதிதாக இயக்குநரே கிடைத்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்தளவுக்கு தரமாகவும் சிறப்பான சொல்லப்படாத சொல்ல வேண்டிய கதையை தேர்வு செய்து அதனை ஆவண குறும்படமாக 13 நிமிடங்கள் 13 நொடிகளுக்கு எடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் தியா சூர்யா.

சூரிய உதயத்துடன் ஆரம்பமாகும் அந்த ஆவணப் படம் திரைத்துறையில் Gaffer என சொல்லப்படும் லைட் உமன்களை பற்றிய கதையை அந்த துறையில் பிரபலமாக இருக்கும் 3 பெண்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.
தியா சூர்யாவின் ஆவணப்படம்: 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று விட்டார் தியா சூர்யா என மார்க் ஷீட் குறித்த விவரங்கள் டிரெண்டான நிலையில், கல்லூரி படிப்பை மும்பையில் படித்து வருகிறார் தியா என்கின்றனர். சினிமா சார்ந்த படிப்பை ஆரம்பித்துள்ள தியா சூர்யா அதற்குள் எடுத்திருக்கும் முதல் ஆவணப்படமே தரமானதாக உருவாகியுள்ளது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் லைட்மேன்களின் வாழ்க்கையே மிகவும் கஷ்டம். அதில், சில பெண்கள் லைட் உமன்களாக எப்படி சாதித்துக் காட்டியுள்ளனர் என்பதை ஆவணமாக்கியிருக்கிறார் தியா சூர்யா.

லீடிங் லைட்: Leading Light என ஆவணப்படத்தின் டைட்டிலே செம ரைமிங்காக உள்ளது. மேலும், படத்தின் முதல் காட்சி மும்பை மாநகரில் சூர்ய உதயத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. சூர்யாவின் மகள் என்றால் சும்மாவா என்பது போல ஆவணப்படத்தை எடுத்து அசத்தியிருக்கிறார். இந்தியாவின் முதல் காஃபர் என அழைக்கப்படும் ஹெடல் தேதியா (Hetall Dedhiya), பிரியங்கா சிங் மற்றும் லீனா கங்குர்டே என சினிமாவில் காஃபர்களாக வேலை பார்க்கும் பெண்களை பேட்டி எடுத்து அவர்கள் துறையில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பல கிலோ எடையுள்ள விளக்குகளை தூக்கிச் சுமக்கும் வேலையை ஏன் தேர்வு செய்தார்கள் என்றும் அதிலுள்ள கஷ்டங்கள் அதில் பெண்கள் எப்படி சாதிக்கின்றனர் உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் வழியாக உலகுக்கு உணர்த்தியிருக்கிறது இந்த ஆவணப்படம்.
ஆணாதிக்கம் பற்றிய மாற்று பார்வை: அந்த ஆவண படத்தில் லீனா கங்குர்டே பேசும் போது, வேலை பார்க்கும் செட்களில் 20 ஆண்களுக்கு நடுவே நான் மட்டுமே ஒரே பெண்ணாக வேலை பார்ப்பேன். ஆனால், ஒருவர் கூட தவறாக என்னை நடத்தியது இல்லை. எனக்கு அடிபட்டு விடக் கூடாது, நான் சரியான நேரத்திற்கு வீட்டுக்குப் போகிறேனா என்று பார்த்து கவனித்துக் கொண்டனர். இந்த உலகத்தில் ஆணாதிக்கம் அதிகரித்து இருக்கிறது என்று சொல்வதை விட பெண்கள் அந்த இடத்திற்கு சார்ஜ் எடுத்துக்கொள்ள முனைவதில்லை என்று தான் சொல்ல வேண்டும் என்றார்.
முயன்றால் முடியாதது இல்லை: பெண்களால் 50 கிலோ லைட்டை தூக்கி சுமக்க முடியாது என்றும் அது ஆண்களின் வேலை என்றும் நினைத்து ஒதுங்கக் கூடாது. வெளிநாடுகளில் எல்லாம் பெண்கள் அசால்ட்டாக ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்கின்றனர். இங்கேயும் பெண்களால் வேலை பார்க்க முடியும். லைட்டை சுமப்பதை தாண்டி அதை எப்படி கையாள்கிறோம், ஒளியை கேமராவுக்கு எப்படி உதவியாக கொடுக்கிறோம் என்கிற ஐடியா தான் இங்கே முக்கியம் என்றும் அழகாக பேசியுள்ளார். சீக்கிரமே 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகாவின் மகள் தியா இயக்குநராக படம் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











