அடடே.. என்னம்மா வளர்ந்துட்டாங்க.. சுரேஷ் ரெய்னாவோட சூர்யா பொண்ணும் பையனும்.. சூப்பர் பிக்!

மும்பை: நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும் சச்சின் டெண்டுல்கரின் மும்பை அணியும் நேற்று ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் துவக்க நிகழ்ச்சி என்பதால் சூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கி நட்பு ரீதியாக விளையாடினர்.

சச்சின் டெண்டுல்கர் பவுலிங்கிற்கு சூர்யா செய்த பேட்டிங் வீடியோவும், அடுத்து சூர்யா க்ளீன் போல்டான வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஷேர் செய்து பாராட்டியும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Suriya daugther Diya and son Dev meets Raina at ISPL opening ceremony

மும்பையில் நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவுடன் வசித்து வரும் நிலையில், மும்பையில் நடைபெற்ற தொடக்க விழாவை காண சூர்யாவின் குழந்தைகளும் வந்திருந்தனர்.

விளையாட்டில் ஆர்வம்: நடிகர் சூர்யா சினிமாவை தாண்டி பிசினஸ்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நடிகை ஜோதிகா மீண்டும் தான் விட்ட இடத்தை பிடிக்க இந்தி படங்கள், வெப்சீரிஸ்கள் என நடித்து வருகிறார். சூர்யாவை போல அவரது குழந்தைகளும் விளையாட்டில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் ஐபிஎல் நடக்கும் போதே சூர்யா மற்றும் அவரது குழந்தைகள் சென்று பார்த்த காட்சிகள் எல்லாம் அப்போதே தீயாக பரவிய நிலையில், தற்போது அப்பாவே சொந்தமாக சென்னை சிங்கம்ஸ் எனும் கிரிக்கெட் அணியை நடத்தி வருவதால் மகனும் மகளும் தங்கள் ஆர்வத்தை அதிகமாக காட்டி வருகின்றனர்.

சச்சினுடன் விளையாடிய சூர்யா: இந்த பாக்கியம் எல்லாம் யாருக்கு கிடைக்கும் என்பது போல சச்சின் டெண்டுல்கர் பந்து போட நடிகர் சூர்யா கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ராம்சரண் உடன் இணைந்து நாட்டுக் கூத்து பாடலுக்கும் சூர்யா நடனமாடினார். சூர்யா அவுட் ஆனதும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் நடித்து வரும் அக்‌ஷய் குமார் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்.

Suriya daugther Diya and son Dev meets Raina at ISPL opening ceremony

ரெய்னாவுடன் சூர்யா பசங்க: தமிழ் சினிமாவில் ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா தான் ரொம்பவே பிடித்த நடிகர் என ஏற்கனவே சொல்லியிருக்கிறார். நேற்று மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட ரெய்னாவுடன் நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரெய்னா தனது ட்விட்டரில் ஷேர் செய்து, அடுத்து சென்னைக்கு வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.

பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்க: நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா, விஜய்யின் மகள் திவ்யா சாஷா மற்றும் சூர்யாவின் மகள் தியா உள்ளிட்டோர் கிடுகிடுவென வளர்ந்து விட்டனர். ஜோதிகாவை போல அச்சு அசல் தியா இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரது போட்டோக்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Suriya daugther Diya and son Dev meets Raina at ISPL opening ceremony

சினிமாவில் சிக்ஸர்: கங்குவா படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கும் சூர்யா அடுத்ததாக பாலிவுட்டில் சூரரைப் போற்று ரீமேக், கர்ணன், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் என அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாச காத்திருக்கிறார். நடிகை ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் திரைப்படம் மார்ச் 8ம் தேதியான நாளை வெளியாகிறது. அந்த படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X