ஆஸ்கர் கதவுகளைத் தட்டட்டும்! சூர்யா, தனுஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் தங்கலானுக்கு வாழ்த்து

சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் தங்கலான். இந்தப் படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்,பலரும் படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Thangalaan Vikram Pa Ranjith

குறிப்பாக படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும் என நடிகர் சூர்யா, நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோ வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது வாழ்த்துக் குறிப்பில், " தங்கலானின் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் தனது வாழ்த்தில், " எனக்குத் தெரிந்த நடிகர்களில் நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அற்பணித்துக் கொண்டு கடின உழைப்பைச் செலுத்தும் நடிகர்களில் ஒருவரான விக்ரம் சாருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

Thangalaan Vikram Pa Ranjith

அதேபோல், நடிகர் ஆர்யா தனது எக்ஸ் பக்க பதிவில், " இயக்குநர் பா. ரஞ்சித், சியான் விக்ரம் மற்றும் தங்கலான் படக்குழுவினர் அனைவருக்கும் இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வாழ்த்துக் குறிப்பில் மிகவும் முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Thangalaan Vikram Pa Ranjith

மண் சார்ந்த கதை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பதிவில், " மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும். அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத் தாங்களே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும். மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்.

Thangalaan Vikram Pa Ranjith

ஆஸ்கர் : எப்போதும் நல்ல படங்களுக்கு தன்னை எப்படி வேண்டுமானாலும் வருத்திக்கொள்வார். நாயகன் விக்ரம். தங்கலான் ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும். வாழ்த்துகள். எப்போதுமே தன் பங்களிப்பு மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமைய மெனக்கிடுபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இது மற்றுமொரு தளத்திற்கு அவரை அழைத்துச் சொல்லும். பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கு வசூலை உலக ரீதியாக பெருக்கித் தரும் படமாக அமையும். நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X