Kanguva Box Office Day 1: கதறவிட்ட சூர்யாவின் கங்குவா.. முதல் நாள் வசூல் விவரம் இதோ!

சென்னை: நடிகர் சூர்யா - தீஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. இந்தப் படத்தினை சுமார் இரண்டரை ஆண்டுகளாக எடுத்து நேற்று திரைக்கு கொண்டு வந்துள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களை அளிக்க, படக்குழுவினருக்கு கொஞ்சம் அப்செட் ஏற்பட்டது எனலாம். இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆனது.

suriya disha patani kanguva box office kanguva

படம் சுமார் 11, 500 ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டதாக படக்குழு அறிவித்தது. படத்தின் புரோமோசனின்போது படக்குழு படம் குறித்து தொடக்கத்தில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் படத்தின் மீதான நம்பிக்கை என பலரும் நினைத்தனர். ஆனால் நாளுக்கு நாள் படக்குழு படம் குறித்து ஓவர் பில்டப்களைக் கொடுத்ததால், ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து சந்தேகம்ன் எழத்தொடங்கியது.

புலம்பல்: படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் அதிகாலைக் காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி கிடைத்தது. இப்படியான நிலையில் படம் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்தனர். ஆனால் படம் சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என ரசிகர்களே புலம்பித் தள்ளி வருகின்றனர்.

இசை: குறிப்பாக படத்தின் இசை, படம் முழுக்கவும் படத்தின் முக்கியமான காட்சிகளின்போதும் வெறும் இரைச்சலாகவே இருந்தது. இது ரசிகர்களை மேலும் எரிச்சல் அடையச் செய்தது. படத்தில் சூர்யாவுக்கு என்றோ அல்லது படத்திற்கு என்றோ சிறப்பான பி.ஜி.எம் இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி பட விமர்சகர்கள் வரை பலரும் கங்குவா படத்தினையும் படத்தின் பின்னணி இசையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வசூல்: இப்படியான நிலையில், படம் முதல் நாளி எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் வசூல் நிச்சயம் ரூபாய் 2000 கோடிகளை வசூலிக்கும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். அப்படி இருக்கும்போது, படத்தின் முதல் நாள் வசூல் பல நூறு கோடிகளைத் தொட்டிருக்கும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் படம் முதல் நாளி இந்தியா முழுவதும் ரூபாய் 22 கோடிகள் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் உலகம் முழுவதும் படம் எப்படியும் ரூபாய் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X