Kanguva Box Office Day 10: சூடுபிடித்ததா சூர்யாவின் கங்குவா ஆட்டம்.. 10 நாளில் எவ்வளவுதான் வசூல்?
சென்னை: சூர்யா- தீஷா பதானி நடித்து கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. மொத்தம் இரண்டு பாகங்களிக் கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்களை படம் கவராத காரணத்தினால், படம் பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. இதனால் படம் வசூலிலும் அடிவாங்கியது. இப்படியான நிலையில் படத்தின் முதல் 10 நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட படம் கங்குவா. இந்தப் படத்தில், சூர்யா, தீஷா பாதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி, போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கார்த்தி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படம் வெளியான முதல் நாளில் இருந்தே படத்தின் பின்னணி இசை குறித்து ரசிகர்கள் தொடங்கி, இசைத்துறையில் ஆஸ்கார் வாங்கிய ரசூல் பூக்குட்டி, சூர்யாவின் மனைவி ஜோதிகா என பலரும் இசை இரைச்சலாக இருப்பதாகக் கூறினர். அதன் பின்னர் படக்குழு தரப்பில் இருந்து, திரையரங்க உரிமையாளர்களுக்கு, இசையின் அளவினை இரண்டு பாய்ண்ட் குறைத்து வைக்கச் சொல்லியிருந்தனர்.

அதேபோல், படத்தில் பல காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் அதையும் கேள்வி எழுப்பினர். இப்படியான நிலையில் படத்தில் இருந்து 12 நிமிடக் காட்சியை படக்குழு வெட்டி எடுத்தது. இந்நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை முன் வைத்தனர்.
விமர்சனம்: நெகடிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரும் அளவுக்கு பாதிப்பினைச் சந்தித்துள்ளது என திரைத்துறையே கூறினாலும், விமர்சனங்களால் நல்ல வசூலை ஈட்டிய படங்களும் உள்ளன. நல்ல படத்தினை எடுத்தால் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள் என பலரும் கூறிவருகின்றனர். இப்படியான நிலையில், யூடியூபர்கள் முதல் நாள் முதல் காட்சி குறித்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தினைக் கேட்டு, அதனை வீடியோவாக வெளியிடவும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தனர். இந்தக் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கொண்டுவர அதனை, திரையரங்க உரிமையாளர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

வசூல்: இப்படியான நிலையில் கங்குவா படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது நவம்பர் 23ஆம் தேதியுடன் 10 நாட்கள் ஆகின்றது. இந்தப் பத்து நாட்களில் படம் இந்தியா முழுவதும் ரூபாய் 66.10 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் நேற்று முன் தினம் அதாவது 22ஆம் தேதி இந்தியா முழுவதும் ரூபாய் 70 லட்சங்கள் மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால் வார இறுதி நாளான நேற்று அதாவது சனிக்கிழமை, படம் ரூபாய் 1.10 கோடிகள் வசூல் செய்துள்ளது.

புஷ்பா 2: படத்தின் பட்ஜெட்டுக்கும் படத்தின் வசூல்க்கும் கணக்குப் பார்த்தால் படம் வணிக ரீதியாக பெரும் தோல்விப்படமாக பார்க்கப்படுகின்றது. படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து அப்டேட்களைக் கொடுத்துக் கொண்டு இருந்த படக்குழு அதன் பின்னர் கப்சிப் மோடுக்குப் போய்விட்டது. அடுத்தவாரம் புஷ்பா 2 ரிலீஸ் ஆகவுள்ளதால் அதுவரை வேறு வழி இல்லாமல், இந்தப் படத்தினை திரையிட்டாகவேண்டும் என்ற நிலைக்கு திரையரங்க உரிமையாளர்கள் வந்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











