Kanguva Box Office Day 2: காத்து வாங்குதா? இல்ல.. கத்தை கத்தையா கல்லா கட்டுதா? கங்குவா வசூல் விபரம்!

சென்னை: நடிகர் சூர்யா - தீஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. இந்தப் படத்தினை சுமார் இரண்டரை ஆண்டுகளாக எடுத்து நேற்று திரைக்கு கொண்டு வந்துள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களை அளிக்க, படக்குழுவினருக்கு கொஞ்சம் அப்செட் ஏற்பட்டது எனலாம். இந்நிலையில் படம் முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

suriya disha patani kanguva box office kanguva

படம் சுமார் 11, 500 ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டதாக படக்குழு அறிவித்தது. படத்தின் புரோமோசனின்போது படக்குழு படம் குறித்து தொடக்கத்தில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் படத்தின் மீதான நம்பிக்கை என பலரும் நினைத்தனர். ஆனால் நாளுக்கு நாள் படக்குழு படம் குறித்து ஓவர் பில்டப்களைக் கொடுத்ததால், ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து சந்தேகம் எழுந்தது. ரசிகர்களின் சந்தேகத்திற்கு ஏற்றபடி, படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அடி வாங்கியது.

suriya disha patani kanguva box office kanguva

ஒரு தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களில் யாராவது ஒருசிலர் படத்தைப் பாராட்டிவிட்டாலே, பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. ரசிகர்கள் படம் குறித்து தெரிவிக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் படக்குழுவினரை அதிர்ச்சி மேல் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மேலும் சில ரசிகர்களை கண்டபடி திட்டியும் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் திரைக்கதை மற்றும் கதை நேர்த்தியில் பெரிய சொதப்பல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

suriya disha patani kanguva box office kanguva

இசை - இரைச்சல்: குறிப்பாக படத்தின் இசை, படம் முழுக்கவும் படத்தின் முக்கியமான காட்சிகளின்போதும் வெறும் இரைச்சலாகவே இருந்தது. இது ரசிகர்களை மேலும் எரிச்சல் அடையச் செய்தது. படத்தில் சூர்யாவுக்கு என்றோ அல்லது படத்திற்கு என்றோ சிறப்பான பி.ஜி.எம் இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி பட விமர்சகர்கள் வரை பலரும் கங்குவா படத்தினையும் படத்தின் பின்னணி இசையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தியேட்டர்களில் படத்தின் இசை அளவினை இரண்டு பாயிண்டுகள் குறைத்து வைக்க, தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

suriya disha patani kanguva box office kanguva

வசூல்: இப்படியான நிலையில், படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 58.62 கோடிகளை வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படம் இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 9 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் படம் இந்தியாவின் வசூலையும் சேர்த்து கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் என்பது ரூபாய் 80 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X