»   »  ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா..!

ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தானா சேர்ந்த கூட்டத்தின் ப்ரோமோஷனல் டூர் அடிக்கும் சூர்யா.

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நாயகன் நாயகியாக நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது.

இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், ரசிகர்களின் காலில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் நடிகர் சூர்யா.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். பெண்கள், சிறுவர்கள் மத்தியிலும் சூர்யாவின் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும். இவர் நடிப்பில் நாளை 'தானா சேர்ந்த கூட்டம்' படம் திரைக்கு வரவுள்ளது.

ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா

ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா

'தானா சேர்ந்த கூட்டம்' ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு வருகிறார் சூர்யா. கேரளாவிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் கொச்சினில் நடைபெற்ற பட ப்ரொமோஷன் நிகழ்விலும் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் டான்ஸ் ஆடினார்.

சூர்யா எதிர்பார்ப்பு

சூர்யா எதிர்பார்ப்பு

'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வருவதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார் சூர்யா. பொதுவாக, முதல் நாள் தான் நடிக்கும் படங்களை அச்சத்தால் பார்க்க விரும்பாத சூர்யா, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை முதல் நாளே திரையரங்கில் பார்க்க இருக்கிறாராம்.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கடந்த வாரம் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, டைரக்டர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.

அனிருத் இசை

அனிருத் இசை

இந்நிலையில், நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னணி இசை பணிகளால் கடந்த வாரம் கலந்துகொள்ளாத அனிருத் இந்த நிகழ்வில் லைவ்வாக பெர்ஃபார்ம் செய்து அசத்தினார்.

காலில் விழுந்த சூர்யா

இந்த நிகழ்ச்சியில், சூர்யாவுடன் ஆட சில ரசிகர்களை அழைத்தார் தொகுப்பாளினி அஞ்சனா. அப்போது வந்த ஐந்தாறு ரசிகர்கள் மேடை ஏறியதும், சூர்யாவின் காலில் விழுந்து வணங்கினர். இதனால் அதிரச்சியான சூர்யா மீண்டும் அவர்களது கால்களில் விழுந்தார்.

காலில் விழும் கலாச்சாரம்

காலில் விழும் கலாச்சாரம்

பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்கக்கூடாது என பலரும் கூறி வருகின்றனர். அதை வரவேற்கும் விதமாக தனது காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்து சங்கடத்தைப் புரிய வைத்துள்ளார்.

English summary
Suriya, Keerthi Suresh starred 'Thaana serndha kootam' will be released tomorrow. Film's pre release promotion event was held at Chennai yesterday. In this event, actor Suriya falls in the feet of fans and created the shock.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X