Suriya: சூர்யாவின் நிஜமுகமே வேறு... மும்பையில் செட்டில் ஆனதன் பின்னணி... உண்மையை சொன்ன பிரபலம்

சென்னை: சூர்யா தற்போது கங்குவா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார்.

சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூர்யாவின் கீழடி விசிட், மும்பையில் செட்டில் ஆகவுள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி பிரபல சினிமா செய்தியாளர் ஒருவர் பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.

 Suriya: Famous film journalist Cheyyar Balu has revealed Suriyas real face

சூர்யாவின் நிஜ முகமே வேறு:நேருக்கு நேர் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான சூர்யா, தற்போது சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதும் வென்றுவிட்டார். இந்நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பத்து மொழிகளில் 3டி டெக்னாலஜியில் உருவாகும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் வீடு வாங்கிய சூர்யா, குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகவுள்ளதாக சொல்லப்பட்டது. தனது குழந்தைகளின் கல்விக்காக மும்பையில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேபோல், கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் கீழடி சென்றுவந்தார் சூர்யா. மேலும் நடிகராக மட்டும் இல்லாமல் அகரம் பவுண்டேசன் மூலம் மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்து வருகிறார்.

அடிக்கடி அரசியல் சார்ந்த கருத்துகளையும் அதிரடியாக தெரிவித்து வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் இன்னொரு முகம் குறித்து பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார். இதுபற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த செய்யாறு பாலு, சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களில் வரும் நிஜ ஹீரோ போல் கிடையாது சூர்யா என்றுள்ளார்.

கீழடிக்கு குடும்பத்துடன் சென்ற சூர்யா, பொதுமக்களை காக்க வைத்துவிட்டு உள்ளே சுற்றி பார்த்துவிட்டு ஃபோட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது மட்டும் தனது குழந்தைகளை போட்டோ எடுக்க அனுமதித்த சூர்யா, ஒருமுறை மும்பை ஏர்போர்ட்டில் தனது மகனையும் மகளையும் போட்டோ எடுக்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்களை எச்சரித்தார். அதேபோல், சூர்யா மும்பையில் செட்டில் ஆகவுள்ளது குறித்தும் விமர்சித்துள்ளார்.

 Suriya: Famous film journalist Cheyyar Balu has revealed Suriyas real face

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த சூர்யா, அப்போது அதனை எதிர்த்துவிட்டு இப்போது தனது குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிறார். ஆனால், இதுபற்றியெல்லாம் அவரிடம் கேட்க முடியாது என செய்யாறு பாலு விமர்சித்துள்ளார். நடிகர்கள் திரையில் தான் ஹீரோவாக இருப்பார்கள் எனவும், ரியலாக அவர்களின் முகமே வேறு என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சூர்யாவின் கீழடி பயணத்தை ப்ளு சட்டை மாறனும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கீழடி அருங்காட்சியகத்தை சூர்யா குடும்பத்தோடு பார்வையிட்டபோது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்கள் வெயிலில் காத்திருந்தனர். இந்த செய்தியை ப்ளு சட்டை மாறன் தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X