ரெட்ரோ டீசரை பார்த்துட்டு மறுபடியும் சிறுத்தை சிவாவை திட்டும் சூர்யா ரசிகர்கள்.. இதுதான் காரணம்!

சென்னை: அஜித்தை வைத்து 4 படம் எடுத்தும் இந்தளவுக்கு சிறுத்தை சிவா திட்டு வாங்கியிருக்கமாட்டார். அண்ணாத்த தோல்விக்குப் பிறகும் அவரை நம்பி சூர்யா படம் கொடுத்த நிலையில், கங்குவா படத்தின் தலைப்பையே கத்துவா என மாற்றிவிடுங்கள் என தமிழ் சினிமா ரசிகர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். இந்நிலையில், சிறுத்தை சிவாவை மீண்டும் ரசிகர்கள் திட்ட தரமான காரணமாக இன்று வெளியான ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசர் அமைந்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் 3டியில் வெளியானது. பாகுபலி படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என படக்குழு செய்த பில்டப்பை பார்த்துவிட்டு முதல் நாள் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு கங்குவா படம் கருணையே இல்லாமல் காதை கிழித்து அனுப்பியதுதான் மிச்சம் என கடுமையான விமர்சனங்கள் குவிந்தன.

suriya 44 retro pooja hegde


47 வயதில் சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து சூர்யா ஒவ்வொரு காட்சிக்கும் உயிரைக் கொடுத்து நடித்தால் அவரது மொத்த உழைப்பையும் சிறுத்தை சிவாவின் மோசமான கதை மற்றும் திரைக்கதை காரணமாக வீணாகிவிட்டதே என ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

சூர்யா ரசிகர்கள் ஹேப்பி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யா 44 படத்திற்கு 'ரெட்ரோ’ என பக்கா மாஸாக டைட்டில் வைத்து சூப்பரான டீசரையும் கொடுத்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிகாந்துக்கு பேட்ட படம் போல சூர்யாவுக்கு ரெட்ரோ படம் மரண மாஸாக இருக்கும் என ரசிகர்கள் கன்ஃபார்ம் பண்ணி ஹைப்புகளை எகிறவிட்டு வருகின்றனர்.

சிறுத்தை சிவாவுக்கு திட்டு: கத்தாமல் வட்டார வழக்கில் ஒவ்வொரு வசனத்தையும் சூர்யா பேசும் ரெட்ரோ டீசரை பார்த்த ரசிகர்கள் அப்படியே திரும்பி சிறுத்தை சிவாவை திட்டி வருகின்றனர். சூர்யா எனும் நடிப்பின் நாயகனை எப்படி பயன்படுத்த வேண்டும் என ரெட்ரோ டீசரை பார்த்துக் கத்துக்கோங்க சிவா. எந்த நெரமும் சூர்யாவை கத்த வைத்துக் கொண்டே நடிக்க வைக்க வேண்டும் என நினைக்கக் கூடாது என கடுமையாக சாடியுள்ளனர்.

டபுள் ட்ரீட் கன்ஃபார்ம்: அடுத்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு எப்படி விடாமுயற்சி, குட் பேட் அக்லி என டபுள் ட்ரீட் காத்திருக்கிறதோ அதே போல சூர்யா ரசிகர்களுக்கும் ரெட்ரோ மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிக்கும் சூர்யா 45 படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் படத்தையும் சூர்யா தொடங்கிவிட்டார் அவரது லெவலே மாறிவிடும் என்கின்றனர்.

அஜித் கிரேட் எஸ்கேப்: கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு சிறுத்தை சிவா அஜித்தை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்றதுமே ரசிகர்களுக்கு இடி இறங்கியது போல இருந்தது. ஆனால், கண்டிப்பாக அஜித் சிறுத்தை சிவாவுடன் இப்போது இணையமாட்டார் என்றும் அடுத்து வெங்கட் பிரபு படம் பண்ண அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அதன் பின்னர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாகவும் சீக்கிரமே பிரசாந்த் நீல் உடனும் அவர் இணைவார் என தகவல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஆறுதல் படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X