"சூர்யா ஃபேன்ஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா..?" - ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை!
Recommended Video

சென்னை : சன் மியூசிக் தொலைக்காட்சியில் இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியிருந்தனர். அதற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது எதிர்ப்பு கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்தப் பிரச்சனையால் கடும் கோபத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள் இன்று காலை சன் டிவி அலுவலகம் முன்பு அவர்கள் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.

கே.வி.ஆனந்த் படம்
கே.வி.ஆனந்த் இயக்கும் 'சூர்யா 37' படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் தகவல்கள் வெளியாகின.

சூர்யா உயரத்தை கிண்டல்
இதை வைத்து பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசினர். "அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு... அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்" என உயரத்தை கிண்டல் செய்தனர்.

திரையுலகினர் கண்டனம்
இந்த நிகழ்வு சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுப்பாளினிகளின் செயலுக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் விஷால், கருணாகரன், இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

சன் டிவி முன்பு ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், இன்று சன் டி.வி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூர்யாவை தரம்தாழ்ந்து விமர்சித்ததைக் கண்டித்து போஸ்டர்களையும், பேனர்களையும் கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர் சூர்யா ரசிகர்கள்.

சூர்யா ட்வீட்
சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற" என்று பதிவு செய்தார்.
ரசிகர்கள் கமென்ட்
சூர்யாவின் ட்வீட்டுக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். "தலைவா எப்பவும் உன் வழியில்...நம்ப அன்பா இருப்போம் :heart:என்ன நடந்தாலும் :heart:மத்தவங்க என்ன பேசினாலும் நம்ப அன்பாவே இருப்போம்!" என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
அப்படியெல்லாம் விட முடியாது
"அப்படியெல்லாம் விடமுடியாது அண்ணா... இனி உங்களை கிண்டல் பண்றவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கும்." என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
எவ்ளோ தில்லு பார்த்தியா
"எங்க சூர்யா ஃபேன்ஸ் கிளப்புக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா... சன் நெட்வொர்க் கூடவே மோதுறாங்க. " என ஒருவர் மீம் போட்டிருக்கிறார்.

சூர்யா - விஜய் ரசிகர்கள் சண்டை
சூர்யாவின் ட்வீட்டுக்கு இடையிடையே, விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர். 'அருவி' படத்தில் விஜய் படங்களை விமர்சித்தபோது சூர்யா ரசிகர்கள் வம்பிழுத்ததால் திருப்பிக் கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











