பப்ளிசிட்டி நீ பாத்த, சிங்கத்தை சீண்டாத: பீட்டாவுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி
சென்னை: எஸ்3 படத்திற்கு விளம்பரம் தேட சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறிய பீட்டா அமைப்பை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் விளாசுகிறார்கள்.
நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள் என மறைமுகமாக அவர் பீட்டாவை விமர்சித்திருந்தார்.

இதை பார்த்த பீட்டாவோ சூர்யா தனது எஸ்3 படத்திற்கு விளம்பரம் தேட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. பீட்டாவின் அறிக்கை சூர்யா ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சூர்யா தற்போது அல்ல முன்பே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார்.
முதலில் நடப்பதை முழுதாக தெரிந்து கொண்டு அதன் பிறகு குற்றம்சாட்டு என ரசிகர்கள் பீட்டாவை ட்விட்டரில் வறுத்தெடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications