உங்க ஒரு ஆளுக்காக தான் பொறுமையா இருக்கோம்: சூர்யா ரசிகர்கள்
சென்னை: உங்க ஒரு ஆளுக்காக தான் பொறுமையாக இருக்கிறோம் என்று ரசிகர்கள் சூர்யாவிடம் தெரிவித்துள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. பட ரிலீஸ் தள்ளிப் போனதுடன் அப்டேட் எதுவும் இல்லை. படம் எப்பொழுது வெளியாகும் என்பதே தெரியாமல் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
செல்வராகவனிடம் கேட்டாலும் பதில் இல்லை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் கேட்டும் பலனில்லை.

சூர்யா
சூர்யா பிற நடிகர்களின் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டீஸர், ட்ரெய்லரை வெளியிட்டு வருகிறார். இதை பார்க்கும் அவரின் ரசிகர்கள் அண்ணா, என்.ஜி.கே. அப்டேட்டே இல்லை. உங்க ஒரு ஆளுக்காக தான் பொறுமையாக இருக்கிறோம் என்று தெரிவித்து வருகிறார்கள்.
என்.ஜி.கே.
என்.ஜி.கே. அப்டேட் வேண்டும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ரசிகர்களை கண்டுகொள்வது இல்லை. ரசிகர்கள் ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். சூர்யா அண்ணாவை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
பிரபு
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு என்.ஜி.கே. படத்தை மறந்துவிட்டதாக கொந்தளிக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.
ரிலீஸ்
என்.ஜி.கே. படத்தை தேர்தலுக்கு முன்பு வெளியிட்டால் முடிவுகள் பாதிக்கப்படுமாம். கொளுத்திப் போடுங்க

பாவம்
என்.ஜி.கே. அப்டேட் கேட்டு மிரட்டி, கெஞ்சிக் கூத்தாடும் சூர்யா ரசிகர்களை பார்க்கவே பாவமாக உள்ளது. அவர்கள் என்ன தான் கெஞ்சினாலும், கதறினாலும் அப்டேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











