கங்குவா ரிலீஸ் எப்போ? திராணி, தைரியம் இல்லனா ஏன் படம் எடுக்குறீங்க.. கடுப்பான சூர்யா ஃபேன்ஸ்!

சென்னை: சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யாவின் 42 வது படமான இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்,கங்குவா படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாததால், சூர்யாவின் ரசிகர்கள் கண்டன போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

நடிகர் சூர்யா, கடைசியாக கதாநாயகனாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தாலும், விமர்சன ரீதியாக இப்படம் தோல்விப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதே போல, மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கட்டரி படத்திலும் செய்தியாளராக கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் நாயகனாக நடித்த படமும் வெளியாகவில்லை. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Suriya kanguva poster

கடுப்பான ரசிகர்கள்: இதனால்,கங்குவா எப்போது வரும் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் கங்குவா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் இப்படத்தில் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு இதுவரை வெளியிட நிலையில், கடுப்பான சூர்யாவின் தீவிர ரசிகர்கள் திண்டுக்கலில் கண்டன போஸ்டரை ஒட்டி உள்ளனர்.அதில், கங்குவா ரிலீஸ் தேதி எப்போ வரும்.. எங்களுக்கு அப்டேட் வேண்டும். படத்தை எடுத்து சொன்ன தேதியில் வெளியிட திராணியும், தைரியமும் இருந்தால் மட்டும் படத்தை தயாரியுங்கள். நீங்க உங்க தயாரிப்பு நிறுவனத்தை வச்சு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. எங்க அண்ணனை விட்டுருங்க என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

முன்னணி நடிகர்கள்: கங்குவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை மிலன் கையாள, படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

வலிமையான வரலாற்று படம்: தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களம் கொண்ட படமாகும். இப்படம் வெறும் கற்பனை கதை மட்டுமில்லாமல். வலிமையான வரலாற்று ஆதாரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் புதிய ஒரு உலகத்தையே பார்க்கும் அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X