அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்

By Siva

சென்னை: பாகுபலி 2 படம் குறித்து விமர்சித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சூர்யா ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டள்ளார்.

சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ரசிகர்கள்

ரசிகர்கள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது வரும் என சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். படம் பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

பிரஷர்

ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதை பார்த்த விக்கி ட்விட்டரில் கூறியதாவது, எனக்கு ஃபர்ஸ்ட் லுக் டிசைன் பிடிக்கவில்லை அதனால் வேறு ஒன்றை தேர்வு செய்துள்ளேன். கொஞ்சம் டைம் கொடுங்க. எனக்கு ரொம்ப பிரஷர் கொடுக்காதீங்க ப்ளீஸ் என்று தெரிவித்தார்.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் அதில் உள்ள 5 தவறுகளை சுட்டிக் காட்டி பெரிய ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டை போட்டு சூர்யா ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார் விக்கி.

இதுக்கு மட்டும்

அப்டேட் கொடுக்க நேரம் இருக்காது ஆனால் இதுக்கு மட்டும் நேரம் இருக்கும் என்று தானா சேர்ந்த கூட்டம் பற்றி எதுவும் தெரிவிக்காதது குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளார்.

டிஎஸ்கே

விக்னேஷ் சிவனின் பாகுபலி 2 ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் போட்டுள்ள கமெண்ட்டில், நீங்க எப்பவும் ட்விட்டர்லயே இருக்கீங்களே tsk shooting லாம் நடக்குதா☺☺☺ என கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X