twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சொடக்கு' பாட்டு போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யா ரசிகர்கள்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யா ரசிகர்கள்!- வீடியோ

    விருதுநகர் : சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

    பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது.

    சூர்யா

    சூர்யா

    நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது.

    கல்லூரி மாணவர்கள்

    கல்லூரி மாணவர்கள்

    விருதுநகர் மொட்டமலையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணித்து கல்லூரிக்குச் செல்வது வழக்கம்.

    சூர்யா ரசிகர்கள்

    சூர்யா ரசிகர்கள்

    இந்நிலையில் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த சூர்யா ரசிகர்கள் சிலர் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் வரும் "சொடக்கு மேல சொடக்கு போடுது" பாடலை போடும்படி பேருந்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர்.

    சொடக்கு பாடல் போடாததால்

    சொடக்கு பாடல் போடாததால்

    அந்தப் பாடலைப் போட ஓட்டுநர் மறுத்ததால் மாணவர்கள், பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் சூர்யா ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களான அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது பற்றி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Surya fans have broken the glasses of the private bus because driver didn't play 'Sodakku' song in bus. The driver and conductor are attacked by Virudhunagar Surya fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X