twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓ, என்.ஜி.கே.வுக்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் இருக்கிறதா?

    By Siva
    |

    Recommended Video

    செல்வராகவனால் சூர்யா ரசிகர்களிடையே ஏற்பட்ட குழப்பம்..!!- வீடியோ

    சென்னை: செல்வராகவன் செய்த வேலையால் சூர்யா ரசிகர்கள் பலத்த யோசனையில் உள்ளனர்.

    தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    சூர்யா

    சூர்யா

    போஸ்டரை பார்த்தவர்கள் அது என்ன படத்திற்கு என்ஜிகே என்று தலைப்பு. சூர்யா வேற சேகுவேரா கெட்டப்பில் இருக்கிறார். என்ஜிகே என்றால் என்னவாக இருக்கும் என்று தான் நேற்றில் இருந்து அனைவரும் யோசித்து யோசித்து முடியை பிய்த்துக் கொள்கிறார்கள்.

    கை

    கை

    போஸ்டரில் கைகள் ஓங்கியபடி உள்ளது அப்படி என்றால் புரட்சியாக இருக்கலாம். அரசியல் பேசப் போகிறாரோ செல்வராகவன். ஏதோ பெருசா திட்டம் போட்டிருக்கிறார் போன்று.

    அர்த்தம்

    அர்த்தம்

    என்.ஜி.கே. என்றால் சூர்யா கதாபாத்திரத்தின் பெயரான நந்தகோபாலன் குமரன் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் செல்வராகவன் சப்பையா என்.ஜி.கே. என்று வைக்க மாட்டார் ஏதோ நல்ல அர்த்தம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

    கார்ல் மார்க்ஸ

    என்- நெப்போலியன், ஜி- குவேரா, கே- கார்ல் மார்க்ஸ். போஸ்டரில் சூர்யாவின் கண்ணாடிக்கு அருகே 463 என்ற எண் உள்ளது. செகுவேராவின் புத்தகத்தில் காணாமல் போன பக்கம் 463 என்கிறார் ரசிகர் ஒருவர்.

    யோசனை

    மார்ச் 5ம் தேதி போஸ்டர் வெளியானதற்கு இப்படியும் ஒரு காரணத்தை கண்டுபிடித்துள்ளார் ரசிகர் ஒருவர். நல்லா வருவீங்க பாஸு.

    English summary
    Suriya fans are super busy in finding the meaning of the title of his upcoming movie NGK being directed by Selvaraghavan. Suriya is seen in Che Guevara get up in the first look poster.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X