எதற்கும் துணிந்தவன் டீசர்.. தியேட்டரை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்களின் கொண்டாட்ட பிக்ஸ் இதோ!

சென்னை: எதற்கும் துணிந்தவன் டீசர் ரிலீஸ் செலிபிரேஷனை தியேட்டரில் சூர்யா ரசிகர்கள் தெறிக்கவிட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் டீசர் பிப்ரவரி 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

பிரபல திரையரங்கில் இதனை முன்னிட்டு ரசிகர்களுக்காக ஸ்பெஷல் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ரசிகர்கள் தியேட்டரில் எதற்கும் துணிந்தவன் டீசரை பார்த்து ரசித்தனர்.

மீண்டும் தியேட்டரில்

மீண்டும் தியேட்டரில்

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், அதன் டீசரே தற்போது தியேட்டரில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் மதுரை தியேட்டரில் சூரரைப் போற்று வெளியானதையே சிறப்பாக கொண்டாடிய சூர்யா ரசிகர்கள் எதற்கும் துணிந்தவன் டீசர் ரிலீஸையும் மேளதாளத்துடன் கொண்டாடினர்.

ராம் முத்துராம் சினிமாஸ்

ராம் முத்துராம் சினிமாஸ்

பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸில் தான் இன்று மாலை எதற்கும் துணிந்தவன் டீசர் வெளியானது. சூர்யாவை பெரிய திரையில் காண ஏராளமான அவரது ரசிகர்கள் தியேட்டரில் ஒன்றுகூடி டீசர் செலிபிரேஷனை தெறிக்கவிட்டுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்களை ராம் முத்துராம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

செல்போனில் வீடியோ

செல்போனில் வீடியோ

ரசிகர்கள் அனைவரும் தங்களின் கைகளில் செல்போன்களை ஏந்தி நின்றபடி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர் பெரிய திரையில் வெளியானதை படம் பிடிக்கும் காட்சிகளை ராம் முத்துராம் சினிமாஸ் தற்போது வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 10ம் தேதி எதற்கும் துணிந்தவன் FDFSஐ இதைவிட சிறப்பாக ரசிகர்கள் கொண்டாட திட்டம் போட்டு வருகின்றனர்.

ஸ்பெஷல் மாஷ் அப்

ஸ்பெஷல் மாஷ் அப்

எதற்கும் துணிந்தவன் டீசர் வெளியீட்டிற்கு முன்பாக நடிகர் சூர்யாவின் ஸ்பெஷல் மாஷ் அப் ஒன்றையும் பெரிய திரையில் ரசிகர்களுக்கு காட்டி உள்ளனர். மேலும், திரையரங்கம் முழுக்க சூர்யாவின் பாடல்கள் அரங்கை அதிர வைத்தன. எதற்கும் துணிந்தவன் டீசரை பார்த்த ரசிகர்கள் விசிலடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

வலிமை பேனர்

வலிமை பேனர்

ராம் முத்துராம் சினிமாஸ் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீசுக்கு முன்பாக நடிகர் அஜித் குமாரின் வலிமை பட ரிலீசுக்கு ரெடியாகி விட்டது என்பது அவர்கள் ஷேர் செய்துள்ள புகைப்படங்களில் தென்படும் வலிமை படத்தின் பேனர்களே சாட்சியாக மாறி உள்ளன. வலிமை திருவிழா ஆரம்பம் என அஜித் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய நடிகர்களின் படங்களால் இந்த மாதம் முதல் மே மாதம் வரை திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறப் போகிறது என்கிற உற்சாகத்தில் தியேட்டர் ஓனர்கள் உள்ளனர்.

Recommended Video

முன்னொரு காலத்தில் Episode01 | Chitra Ramkrishna NSE | Himalayan Yogi | Oneindia Tamil
ஒரு மில்லியன் வியூஸ்

ஒரு மில்லியன் வியூஸ்

ஒரு மணி நேரத்தில் எதற்கும் துணிந்தவன் டீசர் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. சூர்யா ரசிகர்கள் பல மில்லியன் பார்வைகளை கடக்க வைத்து புதிய சாதனைகளை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். நாளைக்குள் 10 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X