அயன் தேவா தான் ரோலக்ஸா? நெட்டிசன்களின் கண்டுபிடிப்பு.. மீண்டும் கிளம்பிய அன்றே கணித்தார் சூர்யா!
சென்னை: அன்றே கணித்தார் சூர்யா என ஏகப்பட்ட விஷயங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்தும் சூர்யா அன்றே கணித்து விட்டார் என ரசிகர்கள் புதுசு புதுசா கண்டுபிடித்து வருகின்றனர்.
கமலின் விக்ரம் படத்தின் கடைசி காட்சியில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அசுரத்தனமான என்ட்ரி கொடுத்து தியேட்டர்களை அதிர வைத்துள்ளார்.
இந்நிலையில், அயன் தேவா தான் ரோலக்ஸ் என்கிற புது உருட்டை ரசிகர்கள் தற்போது உருட்டி வருகின்றனர். அது பற்றி இங்கே பார்ப்போம்..

எனக்கு மேல ஒருத்தன்
கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் சண்டை நடக்கும் போது எனக்கு மேல ஒருத்தன் இருக்கான் என அவர் ரோலக்ஸை குறிப்பிட்டு சொவதால் தான், ரோலக்ஸ் ஒட்டுமொத்த ரவுடிகளையும் அசம்பிள் செய்து லைஃப் டைம் செட்டில்மென்ட் பற்றி பேசும் இடத்தில் கமல் அங்கே ஆஜர் ஆகி இருப்பார். அந்த முறுக்கு மீசையுடன் கமல் வெளியேறும் அந்த கடைசி காட்சி வெறித்தனமாக இருக்கும்.

ஆத்ரேயாவுக்கு அடுத்து
24 படத்தில் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் வில்லனாக மரட்டி இருப்பார் சூர்யா. ஹீரோவாகவே பல படங்களில் பாசிட்டிவ் ரோலில் நடித்து வந்த சூர்யாவை கொடூரமான ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பார்த்ததும் ஆத்ரேயாவையே தூக்கி சாப்பிட்டுட்டானே ரோலக்ஸ் என அந்த கதாபாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கே ஒரு தனி படம் வேண்டும் என்றும் விக்ரம் 3 படத்தை விரைவில் எடுங்க லோகேஷ் என்றும் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

அயன் தேவா தான் ரோலக்ஸ்
இந்நிலையில், சூர்யா ரசிகர் ஒருவர் அயன் தேவா தான் ரோலக்ஸ் என புது உருட்டு ஒன்றை உருட்டி உள்ளார். அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில், அவர் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. எப்படியெல்லாம் டீகோடிங் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க என மற்ற சூர்யா ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தேள் டாட்டூ
கைதி படத்தில் போதைப்பொருள் மூட்டைகளில் தேள் சின்னம் இருக்கும். ரோலக்ஸ் உடம்பிலும் தேள் டாட்டூ இருக்கும். அதே தேள் டாட்டூ அயன் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றில் சூர்யா போட்டு ஆடியதை பார்த்த ரசிகர்கள் அயன் தேவா தான் ரோலக்ஸ் என முடிச்சு போட்டு வருகின்றனர்.
Recommended Video

அன்றே கணித்தார் சூர்யா
அயன் தேவாவுக்கும் விக்ரம் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், ரசிகர்கள் இப்படி ரோலக்ஸ் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அன்றே கணித்தார் சூர்யா லிஸ்ட்டில் இதையும் கொண்டு வந்து விட்டனர். இதன்மூலம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா முழு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











