சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இவங்க தான் ஹீரோயினாம்.. வெற்றிமாறன் முடிவால் ஏமாந்து போன ரசிகர்கள்?
சென்னை: சூர்யாவின் வாடிவாசல் படத்தில் மாஸ்டர் பட நடிகை ஹீரோயினாக உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.
இயக்குநர் ஹரி உடன் இணைந்து சூர்யா நடிக்கப் போவதாக அறிவித்த அருவா படம் அப்படியே டிராப் ஆனது.
சூர்யாவின் ஒடிடி அறிவிப்பை எதிர்த்து இயக்குநர் ஹரி தனது அறிக்கையை வெளியிட்டதும் அந்த கோபம் தானாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில்
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள சூரரைப் போற்று வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தான் நடிக்க உள்ளார். அதற்காக தன்னை தயார் படுத்தியும் வருகிறாராம் சூர்யா.

மாஸ்டர் நடிகை
இந்நிலையில், தற்போது வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் நடிகை யார் என்கிற தகவல் கசிந்துள்ளது. மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா தான் சூர்யாவுக்கு வாடிவாசல் படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிறாராம்.

வடசென்னை
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குநர் அமீருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வடசென்னை படத்தின் 3 பாகங்களுக்கு இவர் புக் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த படங்கள் உருவாகுமா என்ற சந்தேகம் இருப்பதால், வாடிவாசல் படத்தில் ஆண்ட்ரியாவை லீடு ரோலில் நடிக்க வைக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம்.

ரசிகர்கள் அப்செட்
ஏற்கனவே சூரரைப் போற்று திரைப்படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகப் போகிறதே என்ற அப்செட்டில் சூர்யா ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது நடிகை ஆண்ட்ரியா தான் ஹீரோயின் என்ற தகவல் வெளியாகி சூர்யா ரசிகர்களை மேலும், டென்ஷன் ஆக்கி உள்ளது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கலாம், ஆனால், ஹீரோயினாக வேண்டாம் என்ற கோரிக்கையையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

போல்டான கதாபாத்திரம்
ஆனால், வாடிவாசல் கதைக்கு செம போல்டான நடிகை தான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதால், தனது நடிப்பால் பிச்சு உதறும் நடிகை ஆண்ட்ரியா தான் சரியான தேர்வாக இருப்பார் என்பது இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து என்கின்றனர். ஆனால், இதுவரை நடிகை ஆண்ட்ரியா தான் வாடிவாசல் படத்தின் ஹீரோயின் என எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











