சன் டி.வி முன்பு தானா சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.. சூர்யாவை கேவலமாக விமர்சித்ததால் எதிர்ப்பு!
Recommended Video

சென்னை : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யா அடுத்ததாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

கே.வி.ஆனந்த் படம்
கே.வி.ஆனந்த் இயக்கும் 'சூர்யா 37' படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் தகவல்கள் வெளியாகின.

சூர்யா உயரத்தை கிண்டல்
இதை வைத்து பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசினர். "அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு... அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்" என உயரத்தை கிண்டல் செய்தனர்.

திரையுலகினர் கண்டனம்
இந்த நிகழ்வு சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுப்பாளினிகளின் செயலுக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் விஷால், கருணாகரன், இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சன் டிவி முன்பு ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், இன்று சன் டி.வி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யாவை தரம்தாழ்ந்து விமர்சித்ததைக் கண்டித்து போஸ்டர்களையும், பேனர்களையும் கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர் சூர்யா ரசிகர்கள்.

திரையுலகில் சர்ச்சை
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தொகுப்பாளினிகளுக்கும், அவர்களைக் கண்டிக்காத சன் டிவி நிறுவனத்திற்கும் எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சன் டிவி அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications











