விஜய்யுடன் ஒரே ஒரு போட்டோ.. ஆர்ஜே பாலாஜியை ரவுண்டு கட்டி அடிக்கும் சூர்யா ரசிகர்கள்.. என்ன நடந்தது?
சென்னை: சூர்யாவின் வாழ்நாளிலேயே முதன்முறையாக அவருக்கு 300 கோடி ரூபாய் வசூல் படத்தை கொடுத்த ஆர்ஜே பாலாஜியை கொண்டாடுவதை விட்டு விட்டு சூர்யா ரசிகர்களே திடீரென இந்த அடி அடிக்க ஆரம்பித்துவிட்டார்களே என சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் எல்லாம் ஃபீல் பண்ணும் அளவுக்கு ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கு காரணம் நேற்று முதலமைச்சர் விஜய்யை தனது மனைவியுடன் நேரில் சென்று சந்தித்த போட்டோக்களை வெளியிட்டு ஆர்ஜே பாலாஜி போட்ட ஒரே ஒரு ட்வீட் தான் என்கின்றனர்.

கருப்பு படத்தின் கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது என்றும் அந்த படத்தில் நடிக்க சூர்யா வந்த நிலையில், அவருக்காக கதையை மாற்றி எடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்ததாக ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே பேட்டிகளிலேயே சொல்லியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி சொன்னது ஒரு குத்தமா என கேட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு: முன்பெல்லாம் ஒரு படம் ஹிட் அடித்தால் நேரடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து படக்குழு வாழ்த்து பெறும் ஏகப்பட்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன. கருப்பு படத்தையும் ரஜினிகாந்த் பாராட்டினார் என ஆர்ஜே பாலாஜி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து கருப்பு படத்தின் வெற்றிக்காக வாழ்த்து பெற்று வந்த மகிழ்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துக் கொண்டார்.
ஆர்ஜே பாலாஜி ட்வீட்: கருப்பு படத்தை ஆரம்பித்து வைத்த மனிதருடன் இருப்பது பெருமையாக உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் உடன் இருப்பதை நினைத்தால் இது நனவா? கனவா? என்கிற நிலையில் உள்ளது. அதே அமைதி, அதே அன்பு, நன்றி விஜய் சார் என ஆர்ஜே பாலாஜி முதலமைச்சர் விஜய்யை சந்தித்த போட்டோக்களை வெளியிட்டு ட்வீட் போட்டிருந்தார்.
ரவுண்டு கட்டி அடிக்கும் சூர்யா ரசிகர்கள்: கருப்பு படத்திற்கு சாய் அபயங்கர் இசை என்று சொன்னதுமே அடிக்க ஆரம்பித்த சூர்யா ரசிகர்கள், பேபி கண்ணனுக்காக போடப்பட்ட "நாங்க நாலு பேரு" பாடலை எல்லாம் கடுமையாக விமர்சித்தனர். அந்த பாடல் படத்தில் எதற்காக உருவாக்கப்பட்டது, எந்த இடத்தில் இடம்பெறப் போகிறது என்பதை எல்லாம் அறிந்துக் கொள்ளாமல் அடித்த நிலையில், அந்த பாடலையே சுருக்கி விட்டார் ஆர்ஜே பாலாஜி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாறிய நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்ததற்காக ஆர்ஜே பாலாஜி சூர்யாவின் முதுகில் குத்திவிட்டார் என ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர். ஏற்கனவே கார்த்தி சூர்யாவை சந்தித்தார். சிவகுமார் தன்னோட பேரனே விஜய்க்குத்தான் ஓட்டுப்போட்டார் என பெருமையாக பேசி வருகிறார். நாளை சூர்யாவும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசினால் என்ன செய்வார்கள் என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் - விஜய் சந்திப்பு: விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் பரம விரோதிகள் போல செயல்பட்டு வந்தாலும், விஜய் - அஜித் எப்போதும் போல நண்பர்களாகவே தொடர்கின்றனர். அஜித்தின் தாயார் மறைவுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் செலுத்தியதை எல்லாம் பார்த்த பிறகு அவர்கள் அமைதியாகி விட்டனர். சினிமா பிரபலங்கள் யாரையும் விரோதிகளாக பார்ப்பது கிடையாது. தொழில்முறை போட்டி மட்டுமே இருக்கும். ஆனால், ரசிகர்கள் அதை புரிந்துக் கொள்ளாமல் அப்போசிட் நடிகரையும் அவரது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்துவது சரியல்ல.


Click it and Unblock the Notifications