அய்யோ அது நம்ம தளபதி விஜய் இல்லை வேற விஜய்.. எல்லை மீறி கலாய்க்கும் ஃபேன்ஸ்.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: கேரளாவில் கடந்த 5 நாட்களாக 'கோட்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்த நிலையில், தினமும் மாலை நேரத்தில் ரசிகர்களை சந்தித்து வந்தார். ஏகப்பட்ட மாலைகளுடன் நடிகர் விஜய்யை சந்திக்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கிடந்தனர். ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் அவர்கள் கையில் உள்ள மாலைகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்ட காட்சிகள் இணையத்தில் தீயாக பரவின.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் எப்படி சோறு ஊட்டி விடுகின்றனர் என ட்ரோல் வீடியோ ஒன்றை சூர்யா ரசிகர்கள் ஷேர் செய்து ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வீடியோவில் இருப்பது நடிகர் விஜய்யே இல்லை என்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே விஜய் ரசிகர்களை வெறுப்பேற்ற தற்போது அந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
கேரளாவில் மாஸ் காட்டிய விஜய்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல், சினேகா, மினாட்சி சவுத்ரி, லைலா, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்தது. கடந்த 5 நாட்களாக விஜய் கேரளாவில் நுழைந்தது முதல் நேற்று மாலை அவர் செல்ஃபி வீடியோ எடுத்தது வரை தமிழ்நாட்டு ரசிகர்களே பொறாமைப்படும் அளவுக்கு கேரள ரசிகர்கள் அன்பை பொழிந்து தள்ளி விட்டனர்.
சோறு ஊட்டும் ரசிகர்கள்: நடிகர் விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் மாலை அணிவித்து வந்தனர். அந்த மாலைகளை எல்லாம் அவர் போட்டுக் கொண்டு சென்ற காட்சிகள் வீடியோவாகவும் போட்டோக்களாகவும் வெளியாகின. இந்நிலையில், கேரளாவில் விஜய்க்கு எப்படி ரசிகர்கள் சோறு ஊட்டுறாங்க பாருங்க என்றும் வாயிலேயே திணிக்கிறாங்களே என்றும் சூர்யா ரசிகர்கள் ஒரு வீடியோவை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
துனியா விஜய்: அந்த விஜய் நம்ம தளபதி விஜய் இல்லை என்றும் கன்னட நடிகர் துனியா விஜய்யின் வீடியோவை ஷேர் செய்து விஜய்யின் ஹேர் ஸ்டைல் இப்போ துனியா விஜய் ஹேர்ஸ்டைல் மாதிரி தான் இருக்கு என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பதிலுக்கு விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்கள் மற்றும் விஜய்யின் ஹேட்டர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











