சூர்யாவை சுற்றிய திடீர் சோதனை.. சமூக வலைதளங்களில் ஆதரவு கரம் நீட்டும் ரசிகர்கள்.. #அன்புள்ளசூர்யா
சென்னை: தஞ்சை பெரியகோயில் பிரச்சனை, ஆன்லைனில் ரிலீசாகும் பொன்மகள் வந்தாள் பட பிரச்சனை என திடீரென நடிகர் சூர்யாவை சுற்றி பல சோதனைகள் சூழ்ந்து கொண்டன.
Recommended Video
சமீபத்தில் தஞ்சை கோயில் குறித்து சர்ச்சையான கருத்தை நடிகை ஜோதிகா கூறியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் அமேசான் பிரைமில் நேரடியாக பொன்மகள் வந்தாள் படம் வெளியாவதை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் சூர்யாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சிக்கலில் சூர்யா படங்கள்
சூர்யாவின் 2டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் ஆன்லைனில் ரிலீசானால், சூர்யா தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கும், சூர்யா நடிக்கும் படங்களுக்கும் தியேட்டர்களை ஒதுக்க மாட்டோம் எனவும் தியேட்டர் உரிமையாளர்கள் அழுத்தம் திருத்தமாக கூறி வருகின்றனர். இதனால், சூரரைப் போற்று படத்தின் ரிலீசுக்கும் பிரச்சனை ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் பிடிவாதம்
தஞ்சை பெரிய கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகை ஜோதிகா பேசியது மிகப்பெரிய தவறு என்றும், தஞ்சை பெருவுடையாரை தொட்டவர்கள் வாழ்வில் கெடுவார்கள் என்றும் திரெளபதி படத்தின் இயக்குநர் ஜி. மோகன் தொடர்ந்து ஜோதிகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆணித்தரமாக பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்கள் ஆதரவு
இந்நிலையில், சூர்யாவை சுற்றி திடீரென சூழ்ந்து கொண்ட இந்த சோதனையை சமாளிக்க அவருக்கு ஆதரவு தரும் வகையில் #அன்புள்ளசூர்யா என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அகரம் அறக்கட்டளை தொடங்கி நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் செய்து வரும் கல்வி சேவையை ரசிகர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

வேற லெவல்
வெறும் ஒரு மணி நேரத்திலேயே #அன்புள்ளசூர்யா ஹாஷ்டேக்கை இந்தியளவில் சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து ரசிகர்கள் பலத்தை காண்பித்து வருகின்றனர். 1.30 லட்சம் ட்வீட்டுக்கு மேலே விறு விறுவென வெறித்தனமாக இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்களுக்காக இருக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக ரசிகர்களும் இருப்பார்கள் என்பதை உணர்த்தி வருகின்றனர்.

படங்கள் சொதப்பினாலும்
பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் சூர்யா, அண்மை காலமாக சில தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். சூரரைப் போற்று திரைப்படம் மீண்டும் சூர்யாவுக்கு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கொரோனா கலவரத்தால், அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போய் இருக்கிறது. ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுக்காமல் சொதப்பினாலும், ரசிகர்களின் அன்பு சூர்யாவை சுற்றி சூர்ய வட்டமாக இருந்து வருகிறது.

பல உதவிகள்
மாணவர்களுக்கு, விவசாயிகளுக்கு, சினிமா தொழிலாளர்களுக்கு, பேரிடர் காலங்களில் உதவி என பல உதவிகளை நடிகர் சூர்யா செய்துள்ளார். சூர்யா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வேண்டுமென்றே சிலர் நெகட்டிவிட்டியை பரப்புகின்றனர் என சூர்யா ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நிச்சயம் சூர்யா இந்த பிரச்சனைகளை கடந்து கெத்து காட்டுவார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











