ரோலெக்ஸ்.. அந்த தாடி, காதில் ஸ்டட், டாட்டூ.. மொத்த வெறித்தனத்தையும் இறக்கிய சூர்யா!

சென்னை: டானுக்கெல்லாம் டானாக விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார் நடிகர் சூர்யா.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்திலேயே சூர்யா தான் நடிக்க வேண்டியது.

ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில், அந்த படம் கார்த்தி கைக்கு சென்று மிகப்பெரிய ஹிட் அடித்தது.

படு ரகசியமாக

படு ரகசியமாக

சூர்யாவின் கதாபாத்திரத்தை கடைசி வரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி வைத்திருந்த நிலையில், சமூக வலைதளத்தில் அந்த தகவல்கள் லீக் ஆகின. பின்னர், வேறு வழியில்லாமல் படத்தின் புரமோஷனுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்கிற நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோரே சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தனர்.

ரோலெக்ஸ்

ரோலெக்ஸ்

பிரபல வாட்ச் பிராண்டான ரோலெக்ஸ் எனும் அட்டகாசமான பெயரை சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விஜய்சேதுபதிக்கு சந்தனம் என்றும், சூர்யாவுக்கு ரோலெக்ஸ் என வைத்ததிலேயே அவர் கதைக்காகவும் கதை மாந்தர்களுக்காக எவ்வளவு மெனக்கெட்டு உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

டிரெண்டாகுது

டிரெண்டாகுது

அந்த கடைசி 5 நிமிட காட்சியில் டானுக்கெல்லாம் டானாக வரும் சூர்யாவின் காட்சிகளை போட்டோக்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் ஸ்பாய்லர்களாக சூர்யா ரசிகர்களே போட்டு #Rolex என்ற ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகின்றனர். விக்ரம் படத்தில் அந்த காட்சிகளை ரசிகர்கள் பார்ப்பது தான் சரியான கூஸ்பம்ப்ஸ் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட தாடி

நீண்ட தாடி

வாடிவாசல் படத்துக்காக நீண்ட தாடியுடன் சூர்யா இருப்பது போல ஃபேன் மேட் போஸ்டர்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், காதில் ஸ்டட், நீண்ட தாடி, கையில் சிகரெட் என படு மாஸாக கிளைமேக்ஸ் காட்சியில் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தி பிரம்மிப்பை கொடுத்துள்ளார் சூர்யா.

விக்ரம் 3க்கு வெயிட்டிங்

விக்ரம் 3க்கு வெயிட்டிங்

கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் புரமோஷனுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் விக்ரம் 3 படம் பற்றிய அறிவிப்பையும் கமல் வெளியிட்டுள்ளார். சூர்யா மற்றும் கமல் இணைந்து விக்ரம் 3 படத்தில் எப்படி மிரட்டப் போகின்றனர். லோகேஷ் கனகராஜ் லாக்டவுனிலேயே அதற்கும் சேர்த்து ஸ்க்ரிப்ட் எழுதி வைத்து விட்டாரா? என ஏகப்பட்ட கேள்விகளுடன் சீக்கிரமே ரோலெக்ஸ் கதாபாத்திரம் படம் முழுக்க வந்து மிரட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X