ஆஸ்கரை நெருங்கும் சூர்யா.. இதெல்லாம் வேற லெவல் பெருமை.. டிரெண்டாகும் #SooraraiPottruJoinsOSCARS
சென்னை: ஆஸ்கர் உத்தேச பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று தேர்வாகி உள்ள அறிவிப்பு வெளியானதும் #SooraraiPottruJoinsOSCARS ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளின் கீழ் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வாகி உள்ளது.
மாறாவாக நடித்த சூர்யா, பொம்மியாக வாழ்ந்த அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கஷ்டப்பட்ட சூர்யா
சூரரைப் போற்று டெலிடட் காட்சிகள், சூரரைப் போற்று மேக்கிங் என ஒவ்வொரு வீடியோவிலும் இந்த படத்திற்காக நடிகர் சூர்யா போட்ட கடின உழைப்பு மற்றும் அவர் பட்ட கஷ்டம் எல்லாம் உலக நடிகர்களையே வியக்க வைக்கும். நெடுமாறன் ராஜாங்கமாகவே வாழ்ந்திருப்பார் நடிகர் சூர்யா.

பெரட்டி எடுத்த சுதா
இறுதிச்சுற்று எனும் சூப்பரான படத்தை கொடுத்த சுதா கொங்கரா, அடுத்த படத்தை அடுத்த லெவலில் எடுக்க வேண்டும் என நடிகர் சூர்யாவை பெரட்டி எடுத்து வேலை வாங்கியதன் பலனே இது போன்ற ஒவ்வொரு அறிவிப்புகளிலும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

பொண்டாட்டி பொம்மி
இப்படியொரு பொண்டாட்டி கிடைக்க மாட்டாரா என ஆண்கள் ஏங்கும் அளவுக்கு சுய மரியாதை உடனும், கணவனுக்கு சரியான நேரத்தில் தோள் கொடுக்கும் இடத்திலும் மிரட்டியிருப்பார் நடிகை அபர்ணா பாலமுரளி. உன்னை விட்டுட்டு எங்கடா போவேன் என மனைவியை காணவில்லை என தேடி அலைந்து வீட்டிற்கு வரும் சூர்யாவிடம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு செல்லும் இடம் எல்லாம் செம நடிப்பு.

7 நாட்கள் தொடர்ந்து
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதற்கான உத்தேச பட்டியல் போட்டியில் தொடர்ந்து 7 நாட்கள் சூரரைப் போற்று திரையிடப்பட்டு, அங்குள்ள ஜூரிக்களால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என சூர்யா ரசிகர்கள் தற்போது ஹாஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்கரை நெருங்கும் சூர்யா
வரும் மார்ச் 5ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை செலுத்தப்படும் வாக்குகளின் அடிப்படையில் தான் ஆஸ்கர் இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியாகும். இதுவரை கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான உலக நாடுகள் படங்களில் இருந்து இறுதி செய்யப்பட்டுள்ள 366 படங்களில் ஒரே இந்திய படம் இது தான் என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமையான விஷயம் தான்.


Click it and Unblock the Notifications











